ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து டிசம்பர் 12 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் !

 

ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து டிசம்பர் 12 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் !

குறிப்பாக அமேசான், ஃபிலிப் கார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் சாதாரண காலங்களிலே சலுகைகளை அள்ளித்தருவதால் மக்கள் ஆன்லைன் வர்த்தகத்திற்கு மாறியுள்ளனர்.

இந்தியாவில் ஏற்பட்டு வரும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக ஆன்லைன் வர்த்தகம் அதிகரித்துள்ளது. குறிப்பாக அமேசான், ஃபிலிப் கார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் சாதாரண காலங்களிலே சலுகைகளை அள்ளித்தருவதால் மக்கள் ஆன்லைன் வர்த்தகத்திற்கு மாறியுள்ளனர். வேலைக்குச் செல்லும் மக்களுக்கு இது ஏதுவாக இருப்பதாலும், கடைக்குச் செல்லும் நேரத்தை மிச்சப் படுத்துவதாலும் மக்கள் அதிகமாக இதனை உபயோகிக்கின்றனர். உணவு முதல் உடைகள் வரை அனைத்திற்குமே ஆன்லைன் தான். அதுமட்டுமின்றி, சமீபத்தில் “மண்டி” என்னும் பலசரக்கு வாங்கும் செயலி ஒன்று வியாபாரிகளிடையே பெரும் எதிர்ப்புக்குள்ளானது.

ttn

இந்த ஆன்லைன் வர்த்தகங்கள் அதிகமாகி விட்டதால் தமிழக வணிக வியாபாரிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மிகப்பெரிய அளவில் ஏற்பட்டுள்ள பாதிப்பால் இதனைத் தடை செய்ய வேண்டும் என்று நீண்ட காலமாக வணிக சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், இன்னும் அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

tt n

இந்நிலையில், வரும் 12 ஆம் தேதி ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து டெல்லியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகத் தமிழ்நாடு வணிகர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.