ஆன்லைன் மேட்ரிமோனியல் நிறுவனங்களுக்கு உயர் நீதிமன்ற கிளை நோட்டீஸ்!

 

ஆன்லைன் மேட்ரிமோனியல் நிறுவனங்களுக்கு உயர் நீதிமன்ற கிளை நோட்டீஸ்!

ஷாதி டாட் காம், பாரத் மேட்ரிமோனியல் உள்ளிட்ட 10 திருமண இணைய தளங்களையும் அதன் நிறுவனர்களையும் எதிர்மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிடப்பட்டது. செவ்வாய் கிழமை அன்று வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கில் சேர்க்கப்பட்ட 10 தனியார் திருமண இணைய தள நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

இணையதளங்கள் வழியாக நடத்தப்பட்டு வரும் திருமண தகவல் மையங்களில், ஒரே நபர் வெவ்வேறு பெயர்களை பதிவு செய்து கொண்டு, திருமணம் செய்வதாகக்கூறி கணவரை இழந்த பெண்களிடம் பணம், நகைகளை ஏமாற்றுவது தொடர்கதையாகிறது. இதனை கருத்தில்கொண்ட திருச்சியைச் சேர்ந்த பெற்றோர் அறக்கட்டளை சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல்  செய்யப்பட்டது. திருமண தகவல் மையங்கள் வெளியிடும் நபர்களின் உண்மைத்தன்மையை உறுதிபடுத்த வழிசெய்யவேண்டும் என மனுவில் கோரிக்கை விடப்பட்டு இருந்தது.

Online Matrimonial Fraud

வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது ஷாதி டாட் காம், பாரத் மேட்ரிமோனியல் உள்ளிட்ட 10 திருமண இணைய தளங்களையும் அதன் நிறுவனர்களையும் எதிர்மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிடப்பட்டது. செவ்வாய் கிழமை அன்று வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கில் சேர்க்கப்பட்ட 10 தனியார் திருமண இணைய தள நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.