ஆன்லைன் ஆர்டர் செய்பவர்களால், உண்டாகும் கண்ணுக்கு தெரியாத தீமை!

 

ஆன்லைன் ஆர்டர் செய்பவர்களால், உண்டாகும் கண்ணுக்கு தெரியாத தீமை!

இன்றைய தேதிக்கு பெங்களூரு மட்டும் 5,757 டன் கழிவுகளை அனுப்பி வைக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இது சரிபாதியான அளவில் மட்டுமே இருந்தது. இந்த திடீர் எண்ணிக்கைக்கான மிக முக்கிய காரணம் ஆன்லைன் ஆர்டர்களாம்.

பெங்களூருவில் எல்லாமே உயர்ந்துகொண்டே போகிறது, ஆளுங்கட்சியைவிட எதிர்க்கட்சி உறுப்ப்பினர்களின் எண்ணிக்கை, வாகனங்களின் எண்ணிக்கை, அதனால் போக்குவரத்து நெரிசல், ஆன்லைன்  ஆர்டர், அதனால் உருவாகும் குப்பைகள் என பெங்களூருவின் நிலை மாசாமாசம் மோசமாகிக்கொண்டே போகிறது. வெறும் 100 ரூபாய் மதிப்புள்ள ஏதேனும் கண்ணாடியில் அடைக்கப்பட்ட பொருளை அமேசானிலோ அல்லது ஃப்ளிப்கார்ட்டிலோ ஆர்டர் செய்தால், அந்த பொருளை அட்டைப்பெட்டியில் வைத்து,  உடைந்துவிடாமல் இருக்க காற்றடைத்த பைகள் அல்லது தெர்மாகோல்  போட்டு நிரப்பு அனுப்பி வைக்கிறார்கள். நல்லது. ஆனால், அதன்பிறகு தெர்மாக்கோல், அட்டைபெட்டிகளின் நிலை? குப்பைதான். ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படும் உணவுகள் மற்றும் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் அட்டைப்பெட்டிகளின் குப்பையே பெருங்குப்பையாகி வருகிறது பெங்களூருவில்.

Garbage

ஆன்லைனில் ஆர்டர் செய்து வீட்டுக்கு வரவைத்து, பாதி உண்டு மீதியை தூக்கி எறியும்போது உணவும் வீணாகிறது, அது இருக்கும் அட்டைப்பெட்டியும் மறுசுழற்சி செய்ய முடியாத நிலைக்குப் போய்விடுகிறது. கூடுதலாக, இந்த கழிவுகளை சேகரிக்கும் பணியாளர்களுக்கும் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. இன்றைய தேதிக்கு பெங்களூரு மட்டும் 5,757 டன் கழிவுகளை அனுப்பி வைக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இது சரிபாதியான அளவில் மட்டுமே இருந்தது. இந்த திடீர் எண்ணிக்கைக்கான மிக முக்கிய காரணம் ஆன்லைன் ஆர்டர்களாம். அதிக குப்பையை ஏற்படுத்தும் வகையிலான பேக்கிங்கை நிறுவனங்களும், மறுசுழற்சியை எளிமையாக்க வாடிக்கையாளர்களும் அரசுக்கு ஒத்துழைக்காவிட்டால், கார்டன் சிட்டியான பெங்களூரு விரைவிலேயே குப்பை சிட்டியாகிவிடும்.