‘ஆன்லைனில் லோன் விளம்பரம்… செல்போனுக்கு வந்த இஎம்ஐ மெசேஜ்’ : லட்ச கணக்கில் சுருட்டிய பெண்!

 

‘ஆன்லைனில் லோன் விளம்பரம்… செல்போனுக்கு வந்த இஎம்ஐ மெசேஜ்’ : லட்ச கணக்கில் சுருட்டிய பெண்!

சென்னை சாலிகிராமம் கே.கே.கார்டனை சேர்ந்தவர் மீனா. இவர் பேங்கில் லோன் வாங்கி தருவதாக ஆன்லைனில் தனது செல்போன் எண்ணை  பதிவிட்டுள்ளார். அவருக்கு உதவியாக பாரிமுனையை சேர்ந்த சங்கர் என்பவர் உடனிருந்துள்ளார். 

ttn

இதையடுத்து ஆன்லைன் விளம்பரத்தைப் பார்த்துவிட்டு சிலர் மீனாவுக்கு போன்செய்துள்ளனர். அப்போது உங்களின் ஆதார், ரேஷன் கார்டு, பான்  அட்டை எடுத்துக்கொண்டு மண்ணடி அலுவலகத்திற்கு வாங்க என்று கூறியுள்ளார். இதை தொடர்ந்து முகப்பேரைச் சேர்ந்த சந்துரு, பிரவின்குமார், பாரிமுனையைச் சேர்ந்த பெளசியா பேகம் ஆகியோர் அங்கு சென்று மீனாவை சந்தித்துள்ளனர். லோன் குறித்து பேசிய அவர், அவர்களிடமிருந்து ஆதார், ரேஷன் கார்டு, பான்  அட்டை ஜெராக்ஸ்களில்  கையெழுத்து வாங்கி கொண்டு, சில ஆயிரங்களை கமிஷனாக வாங்கி கொண்டார். 

ttn

பின்னர் லோன் வர சில மாதங்கள் தாமதமாகும் என்று கூறி வந்த நிலையில்  ஆவணங்கள் கொடுத்தவர்களின் செல்போன் நம்பருக்கு, டிவி, பிரிட்ஜ், ஏசி  போன்ற அப்பொருட்களுக்கு இஎம்ஐ கட்டவேண்டும் என்று மெசேஜ் வந்துள்ளது.  இதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

 

இதுகுறித்து போலீசில் புகார் அளிக்க போலீசார் நடத்திய விசாரணையில், மீனா மற்றும் சங்கர் இருவரும் சேர்ந்து லோன் வாங்கி தருவதாக கூறி ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு அதில் தவணை முறையில் வீடு உபயோகப்பொருட்கள் வாங்கி வந்துள்ளனர். மேலும் அதை விற்று  இதுவரை 8 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.  இதையடுத்து போலீசார், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் வேறு எங்காவது இவர்கள் ஆவணங்களைப் பெற்று மோசடியில் ஈடுபட்டு  உள்ளார்களா என்று போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.