ஆன்லைனில் மாப்பிள்ளை தேடிய பெண்ணுக்கு ஆப்பு வைத்த திருட்டு கும்பல்! 71 லட்சம் இழந்த பெண்

 

ஆன்லைனில் மாப்பிள்ளை தேடிய பெண்ணுக்கு ஆப்பு வைத்த திருட்டு கும்பல்! 71 லட்சம் இழந்த பெண்

புத்தாண்டுக்கு பரிசு அனுப்பியுள்ளதாக ஆண்ட்ரு ரக்ஷிதாவிடம் கூறியுள்ளார். பின்னர் ரக்ஷிதாவுக்கு பல சர்வதேச அழைப்புகள் வந்தன. அதில் தங்களுக்கு வந்திருக்கும் பரிசுப்பொருள் டெல்லி இந்திரா காந்தி விமானநிலையத்தில் மாட்டிக்கொண்டுள்ளது. அதை விடுவிக்க நீங்கள் பணம் செலுத்தவேண்டும் என்று கூறியுள்ளனர்.

 

ரக்ஷிதா (பெயர் மாற்றம்) என்ற  42 வயதான பெண் திருமணத்திற்காக மாப்பிள்ளை தேடி வந்துள்ளார். அப்போது அவருக்கு சகோதரியிடமிருந்து இங்கிலாந்தைச் சேர்ந்த அறுவை சிகிக்சை நிபுணர் ஆண்ட்ருவின் தொடர்பு கிடைத்துள்ளது. ஆண்ட்ரு இன்ஸ்டாகிராம் கணக்கில் அவரது வாட்ஸாப் நம்பரும் இருந்துள்ளது. ஆண்ட்ருவும் ரக்ஷிதாவும் நன்றாக பேசிப் பழகியுள்ளனர்.

online-matrimony-09

புத்தாண்டுக்கு பரிசு அனுப்பியுள்ளதாக ஆண்ட்ரு ரக்ஷிதாவிடம் கூறியுள்ளார். பின்னர் ரக்ஷிதாவுக்கு பல சர்வதேச அழைப்புகள் வந்தன. அதில் தங்களுக்கு வந்திருக்கும் பரிசுப்பொருள் டெல்லி இந்திரா காந்தி விமானநிலையத்தில் மாட்டிக்கொண்டுள்ளது. அதை விடுவிக்க நீங்கள் பணம் செலுத்தவேண்டும் என்று கூறியுள்ளனர். மேலும் தங்களுக்கு வந்திருக்கும் பரிசில் கோடிக்கணக்கில் வெளிநாட்டு பணம் உள்ளது. அதை இந்திய பணமாக  மாற்ற வரி செலுத்தவேண்டும் என்றும் கூறியுள்ளனர். ரக்ஷிதா தன்னுடைய மேலாளரிடம் ஆண்ட்ருவின் கணக்கிற்கு கேட்ட தொகையை அனுப்புமாறு கூறியுள்ளார். தொடர்ந்து பணம் கேட்டுக்கொண்டே அழைப்புகள் வந்துகொண்டிருந்தது. ஆனால் பரிசு வரவில்லை என்றுணர்ந்த ரக்ஷிதாவுக்கு தான் ஏமாந்தது தெரியவந்துள்ளது. 

பின்னர் அவர் பிப்ரவரி 19, 2020 அன்று சிஐடியின் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தார். ஏமாற்றியவரின் கணக்குகளை முடக்குமாறு சிஐடி சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.