ஆன்லைனில் மது வாங்குவது எப்படி?..குடிமகன்களுக்குகாக வந்து விட்டது டாஸ்மாக் ஆப்?..நம்பி ஏமாற வேண்டாம்!

 

ஆன்லைனில் மது வாங்குவது எப்படி?..குடிமகன்களுக்குகாக வந்து விட்டது டாஸ்மாக் ஆப்?..நம்பி ஏமாற வேண்டாம்!

உங்கள் மொபைலில் உள்ள ப்ளே ஸ்டோரில் சென்று “டாஸ்மாக்” ஆப்பை டவுன்லோட் செய்ய வேண்டும். 

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த 43 நாட்களுக்கு மேலாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. ஆனால் தமிழக அரசுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக கடந்த 7 ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. அதே போல டாஸ்மாக்கை திறக்கலாம் என அனுமதியளித்த நீதிமன்றம், உரிய  கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியது. 

ttn

இது குறித்து கடந்த 8 ஆம் தேதி எழுந்த அவசர வழக்கில் கட்டுப்பாடுகள் முறையாக பின்பற்றப்படாததால் டாஸ்மாக்குகளை மூட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. டாஸ்மாக்குகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என்ற வீடியோக்களும் போட்டோக்களும் சமர்பிக்கப்பட்டதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  இந்த உத்தரவு, குடிமகன்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் ஆன்லைனில் மதுபானம் வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவித்தது. 

ttn

ஆன்லைனில் எப்படி மது வாங்குவது என்று குழம்பித் தவிக்கும் குடிமகன்களை ஏமாற்றுவதற்காகவே இணைய தளத்தில் சில கும்பல் செயல் பட்டு வருகின்றன. வழக்கமாக ட்ரெண்டிங்கில் இருக்கும் விஷயத்தை பற்றி புதிது புதிதாக வதந்தியை கிளப்பும் அத்தகைய கும்பல், தற்போது டாஸ்மாக் விவகாரம் பேச்சுப் பொருளாக மாறியிருப்பதால் அதனை வைத்தும் வதந்தி பரப்பி வருகின்றன.

அதாவது உயர்நீதிமன்றம் டாஸ்மாக்கை மூடுமாறு உத்தரவிட்டதால், தமிழக அரசு ஆன்லைனில் மது விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளதாகவும், அதற்காக ‘டாஸ்மாக்’ என்னும் ஆப்பை உருவாகியுள்ளதாகவும் அந்த ஆப் விரைவில் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் அமல்படுத்தப்படும் என வதந்திகள் பரவி வருகின்றன. குடிமகன்களின் நிலைமையை கேளிக்கையாக மாற்றும் இத்தகைய வதந்திகளை மக்கள் நம்பி ஏமாற வேண்டாம்.