ஆன்லைனில் டிரஸ் வாங்குவதில் பெண்களை தூக்கி சாப்பிட்ட ஆண்கள்…..

 

ஆன்லைனில் டிரஸ் வாங்குவதில் பெண்களை தூக்கி சாப்பிட்ட ஆண்கள்…..

ஆன்லைனில் பெண்களை காட்டிலும் ஆண்கள்தான் அதிகளவில் டிரஸ் வாங்குவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

பொதுவாக ஆண்களை காட்டிலும் பெண்கள்தான் ஷாப்பிங் செய்வதில் அதிக ஆர்வமாக இருப்பர். துணி கடைக்கு அவங்க போயிட்டா எப்பம் வெளியே வருவாங்கன்னு யாருக்கு தெரியாது. அந்த அளவுக்கு ஆர்வமாக அவர்கள் துணிகளை வாங்குவர். இருப்பினும், ஆன்லைனில் வாயிலாக டிரஸ் வாங்குவதில் பெண்களை காட்டிலும் ஆண்கள்தான் முன்னணியில் உள்ளதாக சந்தை ஆய்வு நிறுவனமான நீல்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆன்லைன் ஷாப்பிங்

ஒட்டு மொத்த அளவில் ஆன்லைன் வாயிலான டிரஸ் விற்பனையில் ஆண்களின் பங்களிப்பு 58 சதவீதமாக உள்ளது. அதேசமயம் ஆன்லைன் டிரஸ் விற்பனையில் பெண்களின் பங்கு வெறும் 38 சதவீதம்தான். அதேசமயம் ஒரு புதிய டிரஸ் எடுப்பதற்கு முன்பாக அதற்காக அதிகளவில் தேடும் பழக்கம் பெண்களிடம் உள்ளது. நாட்டின் முக்கிய 8 மெட்ரோ நகரங்கள் மற்றும் டயர் 1 நகரங்களில் இந்த டிரண்ட்தான் நிலவுகிறது.

ஆண் (மாடல்)

ஆன்லைன் விற்பனையில் பெரிய பங்களிப்பை மொபைல் போன்கள் கொண்டுள்ளன. நம் நாட்டில் நடக்கும் மொத்த ஆன்லைன் வர்த்தகத்தில் மொபைல் போன்களின் பங்களிப்பு 48 சதவீதமாக உள்ளது. அடுத்து ஆயுத்த ஆடைகள், செருப்பு உள்ளிட்ட பேஷன் பொருட்கள் 16 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன. நுகர்பொருள் விற்பனையும் தற்போது ஆன்லைனில் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. மொத்த ஆன்லைன் வர்த்தகத்தில் அவற்றின் பங்களிப்பு 11 சதவீதமாக உள்ளது. அடுத்து நுகர்வோர் பொருட்கள் (11 சதவீதம்), அணிகலன்கள் (6 சதவீதம்), மின்னணு சாதனங்கள் (5 சதவீதம்) மற்றும் சமையல் பயன்பாட்டு பொருட்கள் மற்றும் மற்றவை (2 சதவீதம்) கணிசமான பங்கினை கொண்டுள்ளன.