ஆன்மீக அரசியல்தான்… ரஜினி உறுதி

 

ஆன்மீக அரசியல்தான்… ரஜினி உறுதி

முப்பது ஆண்டுகாலமாக சஸ்பென்ஸ் வைத்துக்கொண்டே வந்த ரஜினிகாந்த், கடந்த 2017ம் ஆண்டில் அரசியல் கட்சி தொடங்கப்போவதாகவும், தனது அரசியல் ஆன்மீக அரசியல்தான் என்றும் தெரிவித்தார்.

ரஜினி கட்சி தொடங்கப்போவதை விடமும், அவரது ஆன்மீக அரசியல் என்ற கொள்கைதான் விவாதத்திற்கு உள்ளானது. நீண்ட காலத்திற்கு அது குறித்து விவாதங்கள் நடந்து வந்தன.

ஆன்மீக அரசியல்தான்… ரஜினி உறுதி

இந்நிலையில், இன்றைக்கும் அவர், வரும் ஜனவரி மாதத்தில் கட்சி தொடங்கப்போவதாகவும், டிசம்பர்ம் 31ம்தேதி அன்று கட்சி குறித்த அறிவிப்பும் வெளியிடப்போவதாக தெரிவித்திருக்கிறார்.

மேலும், வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் மக்களுடன் பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான மற்றும் ஊழலற்ற , மாதி மதச்சார்பற்ற அரசியல் உருவாக்குவதாக அவர் அறிவித்திருக்கிறார். முக்கியமாக, ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம் என்று தெரிவித்திருக்கும் ரஜினி, அற்புதம்…அதிசயம்…நிகழும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

மீண்டும் ஆன்மீகம் அரசியல் என்று ரஜினி என்று சொல்வதால், அதுகுறித்த விவாதங்கள் இப்போதே தொடங்கிவிட்டன.

மாத்துவோம்எல்லாத்தையும்மாத்துவோம்
இப்போஇல்லேன்னாஎப்பவும்_இல்ல என்ற ஹேஷ்டேக்குகளையும் ரஜினிகாந்த் டுவிட்டரில் ஷேர் செய்திருக்கிறார். இந்த ஹேஷ்டேக்குகளை ரஜினி ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.