ஆன்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ்.,-ல் இருந்து ட்விட்டர் மொமன்ட்ஸ் நீக்கம்

 

ஆன்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ்.,-ல் இருந்து ட்விட்டர் மொமன்ட்ஸ் நீக்கம்

ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்கு தளத்தில் இருந்து ட்விட்டர் மொமன்ட்ஸ் அம்சம் நீக்கப்படுவதாக ட்விட்டர் அறிவித்துள்ளது

நியூயார்க்: ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்கு தளத்தில் இருந்து ட்விட்டர் மொமன்ட்ஸ் அம்சம் நீக்கப்படுவதாக ட்விட்டர் அறிவித்துள்ளது.

ட்விட்டரில் அதிகம் பயன்படுத்தப்படாத அம்சங்கள் நீக்கவும், பயனுள்ள அம்சங்களை பயர்களுக்கு வழங்குவதில் அதிக கவனம் செலுத்தவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்கு தளத்தில் இருந்து ட்விட்டர் மொமன்ட்ஸ் அம்சாம் வருகிற 23-ம் தேதி முதல் நீக்கப்படுவதாக ட்விட்டர் அறிவித்துள்ளது.

மொபைல் செயலிகளில் இருந்து மட்டும் மொமன்ட்ஸ் அம்சம் நீக்கப்படும் நிலையில், பயனர்கள் டெஸ்க்டாப்பில் மொமன்ட்ஸ் அம்சத்தை தொடர்ந்து பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.