ஆனாலும் இவ்வளவு சிம்பிள் ஆகாது தல! வைரலாகும் புது வீடியோ!

 

ஆனாலும் இவ்வளவு சிம்பிள் ஆகாது தல! வைரலாகும் புது வீடியோ!

தல அஜித் வாடகை காரில் பயணம் செய்யும் வீடியோ வெளியாகி,சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை: தல அஜித் வாடகை காரில் பயணம் செய்யும் வீடியோ வெளியாகி,சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் அஜித். ரசிகர்களால் அன்பாக தல என்று அழைக்கப்படும் அஜித் மீடியா மற்றும் பொது இடங்களுக்கு வருவதைத் தவிர்த்து வருகிறார். இருப்பினும்  அஜித்தை பற்றி செய்தி வராத நாளே இல்லை.

இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தல அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். ஹெச்.வினோத் இயக்கிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் அஜித் பொது இடத்திற்கு அடிக்கடி வரும் சமயத்தில் அவரின் புகைப்படங்கள் மற்றும் விடியோவை அவரது ரசிகர்கள் இணையத்தில் பதிவு செய்து வைரலாகி வருகின்றனர். அந்த வகையில் இம்முறை அஜீத் இண்டிகா வாடகை காரில் பயணம் செய்துள்ளார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவு செய்துள்ளனர்.

தல அஜித் சாதாரணமாக நடந்து கொள்வார் என்று நாம் அனைவரும் அறிந்ததே, அதற்காக இவளோ சிம்பிளா? என்று கூறி அவரது ரசிகர்கள் அந்த விடியோவை வைரலாக்கி வருகின்றனர். 

இதையும் படிங்க: வசிப்பது வாடகை வீட்டில்,தலைவனுக்காக லட்சங்களை வாரி இறைத்த ரஜினி ரசிகர்!?