ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கொரோனா பரிசோதனை: முடிவு என்ன?

 

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கொரோனா பரிசோதனை: முடிவு என்ன?

நாடு முழுவதும் அதிவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

நாடு முழுவதும் அதிவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை உறுதி செய்வதற்கு பல மணி நேரங்கள் ஆவதாக மக்கள் அச்சத்தில் இருந்ததால், ரேபிட் டெஸ்ட் கருவியை எல்லா மாநிலங்களும் வாங்கியுள்ளன. அதே போல தமிழகமும் 24,000 ரேபிட் டெஸ்ட் கருவிகளை வாங்கியுள்ளது. அந்த வகையில் ஆந்திர மாநில அரசும் சுமார் 1 லட்சம் கருவிகளை தென்கொரியாவிடம் இருந்து வாங்கியுள்ளது. 

ttn

கொரோனா இருக்கிறதா இல்லையா என்பதை 30 நிமிடங்களில் கண்டறியும் அந்த கருவி மூலம் மக்கள் தங்களை சோதனைக்கு உட்படுத்திக் கொள்ள பயப்படக் கூடாது என்பதற்காக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, தன்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டார். அந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் இல்லை என்று தெரியவந்துள்ளது. ஆந்திராவில் இதுவரை 572 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 14 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது அங்கு கொரோனா பரவல் குறைவாகவே இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாண்டு வருகிறார் ஜெகன் மோகன் ரெட்டி.