ஆந்திர முதல்வராக பதவியேற்றார் ஜெகன் மோகன் ரெட்டி: உதயநிதியுடன் பங்கேற்ற ஸ்டாலின்!?

 

ஆந்திர முதல்வராக பதவியேற்றார் ஜெகன் மோகன் ரெட்டி: உதயநிதியுடன் பங்கேற்ற ஸ்டாலின்!?

மக்களவை தேர்தலில் வெற்றியை தொடர்ந்து ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்று  கொண்டார். 

ஆந்திரா: மக்களவை தேர்தலில் வெற்றியை தொடர்ந்து ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்று  கொண்டார். 

jagan

ஆந்திராவில் 175 சட்டசபை தொகுதிகளுக்கும், 25 மக்களவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. இதில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்., 151 இடங்களில் வெற்றி பெற்றது. இவரை எதிர்த்து களம்கண்ட சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், 23 தொகுதிகளில் மட்டுமே வென்று தோல்வி அடைந்தது. இதனால் ஜெகன் மோகன் ரெட்டி முதல் முறையாக ஆளும்கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ளார். 

jagan

இந்நிலையில், ஆந்திர மாநில முதல்வராக  ஜெகன்மோகன் ரெட்டி இன்று விஜயவாடாவில்  பதவி ஏற்பார் என்று  ஏற்கனவே கூறப்பட்ட  நிலையில், அதற்கான ஏற்பாடுகள்  சிறப்பாக நடந்தது. இதையடுத்து இந்திரா காந்தி முனிசிபல் ஸ்டேடியத்தில் நடந்த இந்த பதவியேற்பு  விழாவிற்கு ஜெகன் மோகன் ரெட்டி கட்சி நிர்வாகிகளுடன் வருகை புரிந்தார். அப்போது அங்கு  கூடியிருந்த அவரது தொண்டர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். 

mks talin

இதைத் தொடர்ந்து ஜெகன் மோகன் ரெட்டிக்கு,  ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆளுநர் நரசிம்மன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பதவியேற்பு விழாவில், தெலங்கானா முதல்வர்  சந்திரசேகர ராவ், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

stalin

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்  ரெட்டி டெல்லியில் மாலை நடக்கும் இன்று பிரதமர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.