ஆந்திராவில் 3 தலைநகர் திட்டம் : எதிர்ப்பு தெரிவித்து சாலையில் உணவு சமைத்துப் போராடும் விவசாயிகள்!

 

ஆந்திராவில் 3 தலைநகர் திட்டம் : எதிர்ப்பு தெரிவித்து சாலையில் உணவு சமைத்துப் போராடும் விவசாயிகள்!

ஆந்திர மாநிலத்திலிருந்து தெலுங்கானா பிறந்த பிறகு, ஆந்திராவின் தலைநகரமாக அமராவதி இருந்து வருகிறது. இதனைப் பற்றிய விவாதம் ஆந்திர மாநிலச் சட்டசபையில் நடைபெற்றது. 

ஆந்திர மாநிலத்திலிருந்து தெலுங்கானா பிறந்த பிறகு, ஆந்திராவின் தலைநகரமாக அமராவதி இருந்து வருகிறது. இதனைப் பற்றிய விவாதம் ஆந்திர மாநிலச் சட்டசபையில் நடைபெற்றது. 

ttn

அதில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, ” தெலுங்கானா பிரிந்து சென்றதிலிருந்து நிதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால், தற்போது இருக்கும் அமராவதியைச் சட்ட சபை தலைநகராகவும், விசாக பட்டினத்தை நிர்வாக தலைநகராகவும்,  கர்னூலை நீதித்துறைகளுக்கான தலைநகராகவும் மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவித்தார். 3 தலைநகரை உருவாக்கவதை நாம் பரிசீலனை செய்ய வேண்டும். இதனைப் பற்றி மாநில அரசால் அமைக்கப்பட்ட சிறப்புக் குழு முடிவெடுக்கும்” என்று தெரிவித்தார். 

 

​​


இதற்குப் பல மக்கள் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். 3 தலைநகரை உருவாக்குவது வீண் வேலை என்றும் கருத்துகள் எழுந்துள்ளன. இந்நிலையில், 3 தலைநகர திட்டத்தை எதிர்த்து அமரவாதி நகரைச் சுற்றியுள்ள 29 கிராம மக்கள் தர்ணா, சாலை மறியல் மற்றும் வீதிகளில் உணவு சமைத்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். 

ttn

போராட்டத்தில் பேசிய விவசாயிகள், “ஜெகன்மோகன் ரெட்டி எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது, அமராவதியைத் தலைநகரமாக மாற்ற 33 ஆயிரம் ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்தப்பட்டதை ஆதரித்தார். ஆனால், இப்போது அந்த இடத்தை முக்கியத்துவம் இல்லாத சட்டசபை தலைநகராக மாற்ற விரும்புகிறார். அதனால் தான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளனர். ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு இருந்த போது அமராவதியைத் தலைநகரமாக மாற்ற விவசாயிகளிடம் இருந்து 33 ஆயிரம் ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.