ஆந்திராவில் 26 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை! – இன்ப அதிர்ச்சி தந்த ஜெகன் மோகன்

 

ஆந்திராவில் 26 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை! – இன்ப அதிர்ச்சி தந்த ஜெகன் மோகன்

குண்டூர் மாவட்டம் வெலகம்புடியில் உள்ள ஆந்திர பிரதேச தலைமைச் செயலகத்தில் ஆந்திர அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அமைச்சரவை கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செய்தித்துறை அமைச்சர் பேர்னி நானி, “வருகிற உகாதி (மார்ச் 25) பண்டிகையையொட்டி மாநிலம் முழுவதும் உள்ள 26 லட்சம் ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

வரும் உகாதி பண்டிகையையொட்டி 26 லட்சம் பேருக்கு பட்டாவுடன் இலவச வீட்டுமனை வழங்க உள்ளதாக ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்திருப்பது ஆந்திராவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குண்டூர் மாவட்டம் வெலகம்புடியில் உள்ள ஆந்திர பிரதேச தலைமைச் செயலகத்தில் ஆந்திர அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அமைச்சரவை கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செய்தித்துறை அமைச்சர் பேர்னி நானி, “வருகிற உகாதி (மார்ச் 25) பண்டிகையையொட்டி மாநிலம் முழுவதும் உள்ள 26 லட்சம் ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மனைகளில் வீடு கட்டிக்கொள்ளவும், ஐந்து ஆண்டுகள் வரை வங்கியில் அடமானம் வைத்துக் கொள்ளவும், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு விற்பனை செய்துகொள்ளும் உரிமையுடன் கூடிய பட்டா வழங்கப்பட உள்ளது. இதற்காக 43,141 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அரசு நிலமும், தனியாரிடமிருந்து விலை கொடுத்து வாங்கப்பட்ட நிலத்தைக் கொண்டும் இலவச வீட்டுமனை வழங்கப்பட உள்ளது.

free-housing

ஓங்கோலில் தெலுங்கு தேசம் கட்சிக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது ரத்து செய்யப்பட்டு, நீர்ப்பாசனத்துறைக்கு அது மீண்டும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. போக்காப்புரம் விமான நிலையம் அமைக்கும் பணியை தனியார் நிறுவனத்துக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 2010ல் எப்படி நடந்ததோ அதேபோன்று நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுவரை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை நிறுத்திவைக்கவும் முடிவெடுக்கப்பட்டது” என்றார்.