ஆந்திராவில் முக்கிய பதவி: தமிழ்நாட்டு மருமகளுக்கு அடித்த ஜாக்பாட்!

 

ஆந்திராவில் முக்கிய பதவி: தமிழ்நாட்டு  மருமகளுக்கு அடித்த ஜாக்பாட்!

நடிகை ரோஜாவுக்கு ஜெகன் மோகன் ரெட்டி  தலைமையிலான அரசில் முக்கிய பதவி ஒன்று வழங்கப்பட்டுள்ளது. 

ஆந்திரா: நடிகை ரோஜாவுக்கு ஜெகன் மோகன் ரெட்டி  தலைமையிலான அரசில் முக்கிய பதவி ஒன்று வழங்கப்பட்டுள்ளது. 

roja

ஆந்திராவில் 175 சட்டசபை தொகுதிகளுக்கும், 25 லோக்சபா தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. அதில் ஆந்திர சட்டசபைத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்., 141 இடங்களில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்த அமோக வெற்றியையடுத்து ஜெகன்மோகன் ரெட்டி முதல்முறையாக அம்மாநிலத்தின் முதல்வராகியுள்ளார்.

roja

இதனிடையே ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியும், நடிகையுமான ரோஜா நகரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் .  மக்கள் மத்தியில் செல்வாக்கைப் பெற்ற ரோஜா  சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் தேர்தல் பிரசாரம் செய்தார். குறிப்பாக ஜெகன்மோகன் ரெட்டியின் நம்பிக்கைக்குரியவரான ரோஜாவுக்கு  அவர்  தலைமையிலான அரசில் அமைச்சர் பதவி அல்லது துணை முதல்வர் பதவி  கிடைக்கக் கூட வாய்ப்பு இருப்பதாக  அக்கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டது. இருப்பினும் அதுபோன்ற எந்த பதவியும் வழங்கப்படாததால் ரோஜா அப்செட்டில் இருந்தார்.

roja

இந்நிலையில் நடிகையும் சட்டமன்ற உறுப்பினருமான ரோஜாவுக்கு ஆந்திர அரசின் தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு கழகத்தின் தலைவர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஓரளவுக்கு ரோஜா திருப்தி அடைத்துள்ளதாக நம்பிக்கைக்குரிய வட்டாரத்தில் கூறப்படுகிறது.