ஆந்திராவில் நிறைவேறியது ‘திஷா’ சட்டம்.. அதிரடி காட்டும் ஜெகன்மோகன் அரசு !

 

ஆந்திராவில் நிறைவேறியது ‘திஷா’ சட்டம்.. அதிரடி காட்டும் ஜெகன்மோகன் அரசு !

இந்தியத் தண்டனை சட்டத்தின் படி, பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை சட்டம் கிடையாது.

தெலங்கானாவில் பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி, கடந்த மாதம் 27ஆம் தேதி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, எரித்துக் கொல்லப்பட்டார். அதில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கைது செய்த காவல்துறையினர், அவர்களை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பிரியங்கா ரெட்டியின் மரணத்திற்கு 10 நாட்களில், நீதி கிடைத்தது நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. 

ttn

இதே போலச் சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, ஆந்திர மாநில ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அரசு அதிரடியான ‘திஷா’ சட்டத்தை இயற்றினார். அந்த சட்டத்தின் படி, பாலியல் வன்கொடுமையை ஈடுபடும் குற்றவாளிகளுக்கு அதிக பட்ச தண்டனையான தூக்குத் தண்டனை (மரண தண்டனை) விதிக்கப்படும். அதுமட்டுமின்றி, இந்த வழக்கின் ஒட்டுமொத்த விசாரணையும் 21 நாட்களுக்குள் முடியும். இந்த சட்டத்திற்கு அம்மாநில மக்கள் பெரும் வரவேற்பு தெரிவித்தனர். இந்த சட்டம் நேற்று ஆந்திர மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. 

ttn

இந்தியத் தண்டனை சட்டத்தின் படி, பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை சட்டம் கிடையாது. இந்தியாவிலேயே முதன் முதலாக பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் ‘திஷா’ சட்டத்தை இயற்றிய பெருமை ஆந்திர மாநில அரசையே சாரும் என்பது குறிப்பிடத்தக்கது.