ஆந்திராவில் திடீர் டுவிஸ்ட்: மாயாவதியுடன் கூட்டணி அமைத்த பவன் கல்யாண்: தனித்து விடப்பட்ட பாஜக?!

 

ஆந்திராவில் திடீர் டுவிஸ்ட்:  மாயாவதியுடன் கூட்டணி அமைத்த  பவன் கல்யாண்: தனித்து விடப்பட்ட பாஜக?!

ஆந்திராவில் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளது.

ஆந்திரா: ஆந்திராவில் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளது.

மக்களவைத் தேர்தல்:

மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பிகாரில், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம்,  மகாராஷ்டிராவில் சிவசேனா, தமிழகத்தில் அதிமுக என தங்களது   கூட்டணியை உறுதி செய்துள்ளது பாஜக.  

கூட்டணி அமைக்க முயன்ற பாஜக:

இதே போல்  கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் கூட்டணி அமைக்கும் முயற்சியில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இதன் காரணமாக ஆந்திர மாநிலத்தில்  நடிகர் பவன் கல்யாண் தலைமையிலான ஜன சேனா கட்சியுடன் கூட்டணி அமைக்க பாஜகவினர் முயன்றனர். மக்களவைத் தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற இருப்பதால்,  பவன் கல்யானை முதல்வர் வேட்பாளராக முன்மொழியவும் பாஜக தயாராக இருந்தது.

mayavati ttn

 

பகுஜன் சமாஜ் – ஜன சேனா கூட்டணி: 

இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மாயாவதியின் பகுஜன் சமாஜ், பவன் கல்யாணின் ஜன சேனா கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இது தொடர்பாக லக்னோவில்  செய்தியாளர்களைச் சந்தித்த இரு கட்சி தலைவர்களும் இதனை  அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

தனித்து விடப்பட்ட பாஜக:

இதை தொடர்ந்து  மாயாவதி பேசும் போது,  ‘ஆந்திராவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் கூட்டணியாகப் பகுஜன் சமாஜ் கட்சியும், ஜன சேனா கட்சியும்  களம் இறங்கும். பவன் கல்யாண் ஆந்திர முதல்வராக வேண்டும் என்பதே எனது விருப்பம்’ என்றார். இதனால் ஆந்திராவில் தனித்துக் களம் காண வேண்டிய சூழலில் பா.ஜ.க சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.