ஆந்திராவில் ஒளிமறைவு இன்றி அரசுப்பணி ! YSRJ-வின் அடுத்த அதிரடி !

 

ஆந்திராவில் ஒளிமறைவு இன்றி அரசுப்பணி ! YSRJ-வின் அடுத்த அதிரடி !

ஆந்திராவில் 2020 முதல் ஒளிமறைவு இன்றி அரசுப் பணிக்கு ஆட்களை தேர்வு செய்ய நேர்முகத் தேர்வை ரத்து செய்து ஆந்திர முதல் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஆந்திராவில் 2020 முதல் ஒளிமறைவு இன்றி அரசுப் பணிக்கு ஆட்களை தேர்வு செய்ய நேர்முகத் தேர்வை ரத்து செய்து ஆந்திர முதல் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதை கேட்ட ஒட்டு மொத்த ஆந்திர மக்களுக்கும் சந்தோஷம் அடைந்துள்ளனர். இன்னும் சொல்லப் போனால் ஆந்திரா, தெலுங்கானா இரண்டும் பிரியாமலேயே இருந்திருக்கலாமே என தெலுங்கானாவில் சிலர் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவி ஏற்ற நாள் முதலே பல்வேறு நலத்திட்டங்களை சுறுசுறுப்பாக செய்து வருகிறார். ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆண்டுக்கு 12,000 ரூபாய், ஒரே நாளில் ஒன்றரை லட்சம் பேருக்கு அரசு வேலை, கர்ப்பிணிகள், குழந்தைகளக்கு மருத்துவப்படி என வாக்களித்த மக்களின் வயிற்றில் நாள்தோறும் பால் ஊற்றி வருகிறார்.

appsc

ஒருபடி மேலே சென்று ஆந்திராவில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்ற மாநிலங்களில் இருந்து ஆட்களை தேர்வு செய்யக்கூடாது என்றும், சொந்த மாநிலத்தில் உள்ளவர்களை பணியில் அமர்த்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். ஒருவேளை போதிய தகுதி இல்லாவிட்டால் அவர்களுக்கு உரிய பயிற்சி தந்து வேலை தரவேண்டும் எனவும் எந்த மாநில முதலமைச்சரும் அறிவிக்காததை ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் அறிவித்திருந்தார்.

இந்த வரிசையில் ஆந்திரா அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் இனி நேர்முகத் தேர்வு கிடையாது என அறிவித்துள்ளார் ஜெகன்மோகன். 2020 முதல் எழுத்துத் தேர்வு நடத்தி மெரிட் தகுதியை கொண்டு வேலை வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இனி அரசுப் பணி நியமனத்தில் ஒளிவு மறைவு இருக்கக் கூடாது என்றும், ஏபிபிஎஸ்சி நடத்தும் ஒவ்வொரு தேர்விலும் ஐஐஎம், ஐஐடி உதவியை நாடவேண்டும் எனவும் ஆலோசனை கூறியுள்ளார்.

இனி அரசுப் பணி நியமனத்தில் எந்த தவறும் நிகழக்கூடாது என்றும் யாரும் நீதிமன்றத்தின் படி ஏறும் அளவுக்கு வைத்துக் கொள்ளக்கூடாது என்றும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டள்ளார். இந்த உத்தரவை அடுத்து அரசுப் பணியில் காலியாக உள்ள இடங்களை பூர்த்தி செய்யும் வேலையில் அதிகாரிகள் இறங்கி உள்ளனர். ஆந்திர முதல்வரின் நடவடிக்கைகளை பார்க்கும் அங்கிருந்து புலம்பெயர்ந்து சென்னைக்கு வந்தவர்கள் அங்கேயே சென்றுவிடலாமா என யோசிக்கின்றனர்.