ஆந்திராவில் ஐடி கார்டு காண்பித்தும் செய்தியாளர்களை தாக்கிய போலீசார் – டி.எஸ்.பி இடைநீக்கம்

 

ஆந்திராவில் ஐடி கார்டு காண்பித்தும் செய்தியாளர்களை தாக்கிய போலீசார் – டி.எஸ்.பி இடைநீக்கம்

ஆந்திராவில் செய்தியாளர்களை போலீசார் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஏலூர்: ஆந்திராவில் செய்தியாளர்களை போலீசார் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்தார். இதையடுத்து அனைத்து மாநில அரசுகளும் மக்கள் வெளியே நடமாடுவதை கட்டுப்படுத்தியுள்ளது. இதனால் வீடுகளை விட்டு வெளியே திரிபவர்களை போலீசார் கடுமையாக தாக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

ttn

இந்நிலையில், ஆந்திர மாநிலம் ஏலூரில் உள்ள அனுமன் சந்திப்பில் செய்தி சேகரிக்கச் செய்தியாளர்கள் சென்றனர். அவர்களைச் செல்லவிடாமல் போலீஸார் தடுத்து நிறுத்தினர். தங்களின் அடையாள அட்டைகளைச் செய்தியாளர்கள் காண்பித்த போதும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் அவர்களைத் தாக்கினர். இதனால் கோபமடைந்த செய்தியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த செய்தித்துறை அமைச்சர் பேர்ணி நானி செய்தியாளர்களை தாக்கிய ஏலுார் டி.எஸ்.பியை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். அதன்பின் தர்ணாவில் ஈடுபட்ட செய்தியாளர்கள் கலைந்து சென்றனர்.