ஆத்துல போட்டாலும் ஆன்லைன்ல போட்டாலும் அளந்துதான் போடணும்!

 

ஆத்துல போட்டாலும் ஆன்லைன்ல போட்டாலும் அளந்துதான் போடணும்!

2016-17ல் 4 கோடி, 2017-18ல் 41 கோடி, 2018-19ல் 11 கோடி ரூபாய் என காந்திகணக்கில் எழுதியிருக்கிறது தமிழினம். வயதானவர்கள் மற்றும் செல்போன் மற்றும் ஆப்களை சரிவர பயன்படுத்த தெரியாதவர்களைத்தான் குறிவைத்து இந்த தாக்குதல் நடக்கிறது.

வங்கி கிளைகளிலிருந்து அழைப்பதாகக்கூறி ஏடிஎம் கார்டு விவரங்களை வாங்கி ஏமாற்றுவது, ஆன்லைன் லாட்டரி, கிரெடிட் கார்டு தவறாகப் பயன்படுத்தி ஏமாறுவது என பல்வகை ஆன்லைன் மோசடிகளில் கடந்த மூன்றாண்டுகளாக அதிகம் ஏமாறியிருப்பது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தான் என மத்திய அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இது சம்பந்தமான வழக்குகள் அதிகம் பதிவாகியிருப்பதும் தமிழ்நாட்டில்தானாம்.

Telecaller scam

2016-17ல் 4 கோடி, 2017-18ல் 41 கோடி, 2018-19ல் 11 கோடி ரூபாய் என காந்திகணக்கில் எழுதியிருக்கிறது தமிழினம். வயதானவர்கள் மற்றும் செல்போன் மற்றும் ஆப்களை சரிவர பயன்படுத்த தெரியாதவர்களைத்தான் குறிவைத்து இந்த தாக்குதல் நடக்கிறது. இந்தியாவிலேயே அதிகளவு இன்டெர்நெட் பயன்பாடு மற்றும் அதிகளவு ஆன்லைன் பணப்பரிமாற்றங்களில் ஈடுபடும் பிரதான மாநிலங்களில் ஒன்று தமிழகம். மோசடியாளர்கள் கவனம் தமிழகம் நோக்கி வருவதற்கு இதையும் ஒரு காரணமாகச் சொல்கின்றனர் சைபர் வல்லுனர்கள். இந்திய அளவில் சில ஆண்டுகளுக்கு முன்பாக 3 லட்சம் கோடி ரூபாய் என்றளவில் நடந்த‌ ஆன்லைன் வர்த்தகம் இன்னும் 5 ஆண்டுகளில் 13 லட்சத்து 68 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. பதின்மூன்று லட்சம் வர்த்தகத்தில் நூறில் ஒரு பங்கு என்றால்கூட 1,3000 கோடி. உசாரய்யா உசாரு!