ஆதார், ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் கொடுங்க… உ.பி. காங்கிரஸ் கோரிக்கை

 

ஆதார், ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் கொடுங்க… உ.பி. காங்கிரஸ் கோரிக்கை

உத்தர பிரதேத்தில் மக்களிடம் ஆதார், ரேஷன் கார்டு இல்லாவிட்டாலும் அவர்களுக்கு உடனடியாக ரேஷனில் உணவு பொருட்கள் வழங்கும்படி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு அம்மாநில காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது

உத்தர பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு உடனடியாக இலவசமாக ரேஷன் (உணவு பொருட்கள்) வழங்க வேண்டும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லாலு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது: இந்த கடினமான கட்டத்தில், மக்களுக்கு உடனடியாக இலவச ரேஷன் வழங்க வேண்டும் என்பது என்னுடைய ஆலோசனை.

அஜய் குமார் லாலு

அறிக்கைகளின்படி, ஏப்ரல் 5ம் தேதி முதல் ரேஷன் வழங்கபட உள்ளது. இந்த சூழ்நிலையில் இது மிகவும் தாமதமாகி விடும். மக்களுக்கு பருப்புகள், எண்ணெய், உப்பு, சர்க்கரை மற்றும் சோப்பும் வழங்க வேண்டும். ஆதார் மற்றும் ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் தயவு செய்து ரேஷன் வழங்க வேண்டும்.

ஆதார் இல்லாதவர்களுக்கும் ரேஷன் பொருட்கள்

மாநிலத்தில் பல குடும்பங்கள் எரிபொருள் இல்லாமல் உள்ளன. அவர்களுக்கு கியாஸ் சிலிண்டர்கள் வழங்க வேண்டும். எங்கும் பொருந்தினாலும் பிங்கர் பிரிண்ட் பயோமெட்ரிக் சிஸ்டத்தை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.