ஆதார் எண்ணை சமூக வலைத்தளங்களோடு இணைப்பது தொடர்பான மனு தள்ளுபடி…!

 

ஆதார் எண்ணை சமூக வலைத்தளங்களோடு இணைப்பது தொடர்பான மனு தள்ளுபடி…!

சமூக வலைத்தளங்களில் ஒரே நபர் பல கணக்குகளை வைத்துக் கொண்டு தவறான கருத்துக்கள் பரவுவதால் பல பேர் பாதிக்கப்படுகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் ஒரே நபர் பல கணக்குகளை வைத்துக் கொண்டு தவறான கருத்துக்கள் பரவுவதால் பல பேர் பாதிக்கப்படுகின்றனர். ஏற்கனவே, சென்னை உயர்நீதி மன்றம் வாட்ஸ்ஆப், பேஸ் புக் மற்றும் ட்விட்டர் ஆகிய நிறுவனங்களுக்குத் தொலைக்காட்சிகளுக்கு இருப்பதைப் போல் கட்டுப்பாடு அமைப்பு செயல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்நிலையில், அஷ்வினி  என்பவர் அனைத்து சமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பது தொடர்பான பொது நல வழக்கை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்திருந்தார். 

Aadhar card

அந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், எல்லா வழக்குகளையும் உச்சநீதிமன்றம் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் இது தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பதைச் சுட்டிக் காட்டிய நீதிபதிகள், வேண்டுமானால் அங்கு மனு அளித்து இந்த வழக்கைத் தொடருங்கள் என்றும் கூறி அஷ்வினி அளித்த மனுவைத் தள்ளுபடி செய்துள்ளனர். இதனையடுத்து, அஷ்வினி தான் அளித்த மனுவைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகக் கூறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன.