ஆதாரம் கிடைக்கக் கூடாது… சிசிடிவி கேமராவை உடைத்த டெல்லி போலீஸ்!

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே கலவரம் மூண்டது. போலீஸ் கலவரத்தைக் கட்டுப்படுத்த தவறிவிட்டது என்று டெல்லி உயர் நீதிமன்றம் முதல் அனைவரும் சொல்லிவருகின்றனர். இந்த நிலையில், டெல்லி போலீஸ் சிசிடிவி கேமரா ஒன்றை உடைக்கும் காட்சி தற்போது வைரல் ஆகி வருகிறது.

கலவரம் தொடர்பான ஆதாரங்கள் சிக்கிவிடாமல் இருக்க சாலைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை போலீசாரே உடைத்த வீடியோ வைராகி வருகிறது.

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே கலவரம் மூண்டது. போலீஸ் கலவரத்தைக் கட்டுப்படுத்த தவறிவிட்டது என்று டெல்லி உயர் நீதிமன்றம் முதல் அனைவரும் சொல்லிவருகின்றனர். இந்த நிலையில், டெல்லி போலீஸ் சிசிடிவி கேமரா ஒன்றை உடைக்கும் காட்சி தற்போது வைரல் ஆகி வருகிறது.
பெட்ரோல் பங்க் அருகே பூந்தொட்டி மீது ஏறி காவலர் ஒருவர் லத்தியைப் பயன்படுத்தி சிசிடிவி காமராவை உடைக்கிறார். அவருக்கு மேலும் சில போலீசார் உதவி செய்கின்றனர். இதை சாலையிலிருந்த பொது மக்களில் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். டெல்லி போலீஸ் எந்த அளவுக்கு மோசமாக நடந்து கொண்டது என்பதை இந்த வீடியோ காட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.