ஆதாரமற்ற செய்திகளைப் பரப்பிய நான்கு டிவிட்டர் கணக்குகள் திடீர் முடக்கம்!

 

ஆதாரமற்ற செய்திகளைப் பரப்பிய நான்கு டிவிட்டர் கணக்குகள் திடீர் முடக்கம்!

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்துள்ளது

ஆதாரமற்ற செய்திகளைப் பரப்பிய நான்கு டிவிட்டர் கணக்குகள் திடீர் முடக்கம்!

ஜம்மு- காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களைப் பதிவிட்ட நான்கு டிவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. 

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்துள்ளது. மேலும் அம்மாநிலத்தை இரண்டாகப் பிரித்து ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து மசோதாவைத் தாக்கல் செய்து அதற்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளன.

இந்நிலையில் ஜம்மு- காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியாவிற்கு எதிராகவும்,  தவறான மற்றும் ஆதாரமற்ற செய்திகளைப் பரப்பியதாகத் தற்காலிகமாக நான்கு டிவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.  பாதுகாப்பு அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று டிவிட்டர் நிர்வாகம் இந்த கணக்குகளை முடங்கியுள்ளது. இதுபோன்ற ஆதாரமற்ற தகவல்களைப் பரப்பும் மேலும் நான்கு கணக்குகள் விரைவில் முடக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.