ஆதரவு தேடும் பரவை முனியம்மா: நேரில் சென்று உதவி செய்த நடிகர்!

 

ஆதரவு தேடும் பரவை முனியம்மா:  நேரில் சென்று உதவி செய்த நடிகர்!

சிகிச்சை பெற்று வந்த அவர் போதிய பணவசதி இல்லாததால் மீண்டும் வீட்டிற்கே அழைத்து வரப்பட்டார்

நடிகர் அபி சரவணன் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள பரவை  முனியம்மாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். 

abi

நாட்டுப்புற பாடகியும் நடிகையுமான பரவை  முனியம்மா கடந்த சில ஆண்டுகளாக இதய கோளாறு மற்றும் நுரையீரல் தொற்று  காரணமாக அவதிப்பட்டு வருகிறார். சமீபத்தில் மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் போதிய பணவசதி இல்லாததால் மீண்டும் வீட்டிற்கே அழைத்து வரப்பட்டார்.  இதனால்  பரவை  முனியம்மாவின்   மருத்துவ செலவுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

abi

இந்நிலையில் நடிகர் அபி சரவணன் பரவை  முனியம்மாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். மேலும் அவருக்கு துணிகள், பழங்கள் மற்றும் தேவையான மருந்து பொருட்கள் ஆகியவற்றை வாங்கிக்கொடுத்ததுடன்,  பண உதவியையும் செய்துள்ளார். 

abi

முன்னதாக பரவை  முனியம்மாவை சந்திக்க சில நாட்களுக்கு முன்பே மதுரைக்கு கிளம்பிய அபி சரவணன், சுஜித் மீட்பு பணியை கேள்விப்பட்டு திருச்சி சென்றுவிட்டது  குறிப்பிடத்தக்கது.