ஆதரவு அளிக்கின்றீர்களா… சிவசேனாவில் இணையட்டுமா? –  மிரட்டல் விடுத்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்

ஆதரவு அளிக்கின்றீர்களா… சிவசேனாவில் இணையட்டுமா? –  மிரட்டல் விடுத்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்

சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க அல்லது சிவசேனாவில் இணையத் தயார் என்று 35 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சி அமைக்க ஆளுநர் விடுத்த அழைப்பை பா.ஜ.க நிராகரித்துவிட்டது. இந்த நிலையில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று சிவசேனா திட்டமிட்டு வருகிறது. 

shiv sena and congress

குதிரைபேரம் நடைபெறுவதை தவிர்க்க காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் தற்போது ஜெய்ப்பூரில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆலோசனை நடத்தி வருகிறார். அவரிடம் மொத்தம் உள்ள 44 எம்.எல்.ஏ-க்களில் 35 பேர் வெளிப்படையாகவே சிவசேனாவை ஆதரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அப்படி ஆதரவு அளிக்க காங்கிரஸ் விரும்பவில்லை என்றால், மீண்டும் ஒரு தேர்தல் நடைபெறுவதைத் தவிர்க்க சிவசேனாவுக்கு கட்சித் தாவக்கூட தயாராக உள்ளதாக அவர்கள் எச்சரக்கைவிடுத்துள்ளனர். இதனால், முடிவெடுக்க முடியாமல் காங்கிரஸ் தலைமை குழப்பத்தில் உள்ளது. 
இந்த சூழலில், மகாராஷ்டிரா அரசியலில் குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்தி மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டுவர பா.ஜ.க திட்டமிட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.