ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி : முதல்வர் அறிவிப்பு !

 

ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி : முதல்வர் அறிவிப்பு !

பட்ஜெட் தொடர்பான மூன்றாவது நாள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.

பட்ஜெட் தொடர்பான மூன்றாவது நாள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் குடியுரிமை, இஸ்லாமியர்கள் போராட்டம், வேளாண் மண்டலம் உள்ளிட்ட பல்வேறு விவகாரம் தொடர்பாகப் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்கள் நடைபெற்ற கூட்டத்தொடரின் போதும் சபாநாயகர் கருத்தை எதிர்த்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். அதே போல இன்றும் அதிமுக அமைச்சர்களின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். 

ttn

சட்டப்பேரவையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினமான பிப்.24 ஆம் தேதி பெண்குழந்தைகளின் பாதுகாப்பு தினமாகக் கொண்டாடப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, பெற்றோர்களை இழந்த பெண் குழந்தைகளுக்கு 21 வயது ஆகும் போது ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் ஆதரவற்ற பெண் குழந்தைகளின் சமூக பொருளாதார நலன் கருதி இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.