ஆண்/ பெண் தனது கடந்த கால காதலை துணையிடம் சொல்லலாமா?

 

ஆண்/ பெண் தனது கடந்த கால காதலை துணையிடம்  சொல்லலாமா?

பெரும்பாலான வீடுகளில் கணவன், மனைவி கருத்து ஒற்றுமையோடு இருப்பதே கிடையாது. ஆனால் இருவருடைய விருப்பங்கள், வெறுப்புகள் இரண்டைப் பற்றியுமே ஒருவருக்கொருவர் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

பெரும்பாலான வீடுகளில் கணவன், மனைவி கருத்து ஒற்றுமையோடு இருப்பதே கிடையாது. ஆனால் இருவருடைய விருப்பங்கள், வெறுப்புகள் இரண்டைப் பற்றியுமே ஒருவருக்கொருவர் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான ஜோடிகள் என்ன செய்கிறார்கள்?ஒருவருக்கொருவர் தங்களுடைய விருப்பங்களை மட்டுமே பகிர்ந்து கொள்கிறார்கள்.

அதேபோல், எதிர்பார்ப்புகளில் எது நியாயமானது, எது நடைமுறைக்குச் சாத்தியமானது என்பது பற்றிய தெளிவு வேண்டும். பல நேரங்களில் கணவர் என்ன எதிர்பார்க்கிறார் என்பது மனைவிக்கும், மனைவியின் எதிர்பார்ப்பு கணவருக்கும் வெளிப்படையாகத்  தெரியாததால் கூட பிரச்சனைகள் வளர்வதுண்டு.

முந்தைய காதலை கணவன்/ மனைவியிடம் சொல்லலாமா?

love

**தம்பதிகளுக்குள் பிரச்சனையை உருவாக்கும் முக்கியமான காரணிகளுள் ஒன்று திருமணத்திற்கு முந்தைய காதல் அல்லது நடத்தைகள் தான். தெரிந்தோ,தெரியாமலோ செய்துவிட்ட ஒரு தவறால், மனதில் குற்ற உணர்வு இருந்து கொண்டே இருக்கும். அது எப்போது தனது கணவருக்குத்  தெரிய வருமோ? என்ற உறுத்தல் வாழ்க்கையைப் பாதிக்கும்.

**வேறு யாராவது குறுக்கிட்டு உண்மைகளைச் சொல்லி வாழ்க்கையை நாசமாக்கிவிடுவார்களோ? என்ற பய உணர்வு கூட எழும்.

**அதற்காக மனம் விட்டு பேசுகிறேன் என்ற பெயரில் கடந்த கால விஷயங்களை எல்லாம் சொல்லி பாவ மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை. திருமணத்திற்குப் பின் இருவரும் எப்படி வாழ வேண்டும், எப்படி உண்மையாக இருக்க வேண்டும் என்பது தான் முக்கியம்.

**கடந்த கால உண்மைகள் அனைத்தையும் சொல்லிவிட முடியாது. அப்படி செய்திடவும் கூடாது என்பதை இருவரும் சரியாக புரிந்திருக்க வேண்டும்.

exlove

**எதிர்காலத்தில்  நம்மைப் பற்றிய எதிர்மறை ரகசியம் யார் மூலமாகவோ  தெரியவந்தால் என்ன செய்வது என்று பயந்து வாழாமல், அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற பக்குவத்தை இருவரும் பெற்றிருக்க வேண்டும்.

**ஆண், பெண் இருவருமே கடந்த கால விஷயங்கள் தேவையில்லாமல் உங்கள் வாழ்க்கையில் பிரச்னையை உருவாக்கும் என்று நினைத்தால் அதை ஒருவரிடம் மற்றொருவர் கேட்டு தெரிந்து கொள்ள நினைக்காமல் இருப்பது தான் நல்லது. அதற்காக ஒருவர் மற்றவரிடம் உண்மையாக இல்லையென்று அர்த்தமில்லை.

**இருவரும் இணைந்து சேர்ந்து வாழ்கிற இந்த நிகழ்கால வாழ்க்கை தான் இருவருக்குள்ளும் பரஸ்பரத்தோடு இணைந்து வாழ வேண்டிய தருணம் என்பதைப் புரிந்து கொண்டு இருவரும் செயல்படுவதே எதிராக்காலத்திற்கு நல்லது.