ஆண் குழந்தைக்கு அம்மாவான டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா!

 

ஆண் குழந்தைக்கு அம்மாவான டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா!

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தம்பதி கடந்த 2010ம் ஆண்டு காதல் திருமணம் செய்துக் கொண்டனர். இரட்டையர் பிரிவு தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் இடம், 6 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சானியா மிர்சா, கர்ப்பமானதையடுத்து விளையாட்டில் இருந்து ஒதுங்கினார்.

saniamirza

இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சானியா மிர்சாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அவரது கணவர் சோயப் மாலிக் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இந்த செய்தியை சானியாவின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இது குறித்த சோயப் மாலிக்கின் ட்வீட்டில், உணர்ச்சிப்பூர்வமாக இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன். தாயும் சேயும் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து சானியா மிர்சா, சோயப் மாலிக் ரசிகர்களும், திரை பிரபலங்களும், விளையாட்டு நட்சத்திரங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.