ஆண் குழந்தைக்கு அப்பாவான பிக் பாஸ் பிரபலம்!

 

ஆண் குழந்தைக்கு அப்பாவான பிக் பாஸ் பிரபலம்!

நடிகரும் பிக் பாஸ் பிரபலமுமான சென்றாயனுக்கு சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

சென்னை: நடிகரும் பிக் பாஸ் பிரபலமுமான சென்றாயனுக்கு சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

நடிகர் தனுஷ் நடித்த பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் அறிமுகனவர் நடிகர் சென்ட்ராயன். அதைத்தொடர்ந்து பொல்லாதவன், ஆடுகளம், சிலம்பாட்டம் உள்ளிட்ட படங்களில் சிறு கதாப்பாத்திரங்களில் நடித்த நடிகர் சென்ராயன் மூடர் கூடம் படத்தின் மூலம் கவனம் பெற்றார். 

பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும் வில்லனாகவும் நடித்து பின் கடந்த ஆண்டு பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குயேற்று தனது வெகுளித்தனமான தன்மையால் மக்களிடம் மிகவும் பரிச்சியமானவராக மாறினார் சென்றாயன். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னா் கயல்விழி என்பவரை சென்றாயன் காதலித்து திருமணம் செய்துகொண்டாா். ஆனால் அவர்களுக்கு சிறிது காலம் குழந்தை இல்லாமல் இருந்தது. 

sendrayan

அதை பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது கமல் ஹாசன்னிடம் தான் ஒரு குழந்தையை தத்தெடுக்க இருப்பதாக சென்ட்ராயன் கூறினார். ஆனால் அவர் அப்படிச் சொல்லிய ஒருசில நாட்களிலேயே கயல்விழி கர்ப்பம் தரித்தார். இதையடுத்து பிக்பாஸ் வீட்டிலேயே சென்ராயன் – கயல்விழி தம்பதிக்கு குடும்பத்தாரின் உதவியுடன் வளைகாப்பு உள்ளிட்ட சடங்குகள் செய்யப்பட்டன. பின்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி நடிகை சினேகாவை நேரடியாகச் சந்திக்க வேண்டும் என்ற தனது மனைவியின் ஆசையையும் சென்ராயன் நிறைவேற்றி வைத்தார்.

இந்நிலையில் நடிகர் சென்றாயன் மற்றும் கயல்விழி தம்பதிக்கு நேற்று மாலை 3.30மணி அளவில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அவர்களுக்குப் பல பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.