ஆண் எம்பிக்கள் ஜீன்ஸ் அணிந்து வந்தால் ஏன் எதிர்ப்பதில்லை..? – பெண் எம்பிக்கள் கேள்வி

ஆண் எம்பிக்கள் ஜீன்ஸ் அணிந்து வந்தால் ஏன் எதிர்ப்பதில்லை..? – பெண் எம்பிக்கள் கேள்வி

இளம் வயதுடைய ஆண், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து ஜீன்ஸ் அணிந்து வந்தால் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள். இதையே ஒரு பெண் செய்துவிட்டால் பிரச்சனை எழுந்துவிடுகிறது என்று நடிகையும் எம்பியுமான மிமி சக்ரபோர்த்தி தெரிவித்தார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளில் 22 தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸும், 18 தொகுதிகளில் பாஜகவும் வெற்றி பெற்றுள்ளன. திரிணமூல் கட்சி சார்பாக களமிறக்கப்பட்ட மிமி சக்ரபோர்த்தி(30), நுஸ்ரத் ஜஹான்(29) ஆகிய இரண்டு பேரும் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றனர்.

முதல்முறையாக எம்பி ஆகியுள்ள இவர்கள், பேண்ட் சர்ட் அணிந்து நாடாளுமன்றம் சென்றனர். நாடாளுமன்ற கட்டடம் முன்பு தங்களது அடையாள அட்டைகளுடன் புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். பேண்ட் சர்ட்டுடன் நாடாளுமன்றம் சென்ற அவர்களுக்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மிமி, “நாங்க என்ன ட்ரெஸ் அணிந்தால் உங்களுக்கு என்ன. ஊழல் கறையுள்ள அரசியல்வாதிகள் புனிதமான ஆடைகளை அணிந்து வந்தால் விமர்சிக்காத நீங்கள் எங்களை மட்டும் விமர்சிப்பது ஏன். ஒரு பெண் ஜீன்ஸ் அணிந்துவந்தால் கேட்கும் நீங்கள் ஆண் ஜீன்ஸ் அணிந்துவந்தால் கேட்பதில்லை” என காட்டமாக பதிலளித்துள்ளார். 

மேலும் இதுகுறித்து நுஸ்ரத் கூறுகையில், ”மாற்றத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும், இனி புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.