ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்ட கூல்பேடு கூல் 3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

 

ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்ட கூல்பேடு கூல் 3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்ட கூல்பேடு கூல் 3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி: ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்ட கூல்பேடு கூல் 3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கூல்பேடு நிறுவனம் கடந்தாண்டு இறுதியில் மூன்று மெகா சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ததை தொடர்ந்து, தற்போது இந்தியாவில் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்ட கூல்பேடு கூல் 3 ஸ்மார்ட்போன் செய்துள்ளது. வாட்டர் டிராப் நாட்ச், டுயல் ரியர் கேமரா செட்டப், ரியர் விரல்ரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக் ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ஸ்மார்ட்போன் ரூ.5,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மிட்நைட் ப்ளூ, ரூபி பிளாக், ஓஷன் இண்டிகோ, டீல் கிரீன் ஆகிய நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்களாக 5.71 இன்ச் ஹெச்.டி டிஸ்பிளே, ஆக்டாகோர் யுனிசொக் பிராஸசர், 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி, 8 எம்.பி + 0.3 எம்.பி டுயல் ரியர் கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 5 எம்.பி செல்ஃபி கேமரா, 3000 எம்.ஏ.ஹெச் பேட்டரி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்தியாவில் எப்போது விற்பனைக்கு வருகிறது என்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.