ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் இருந்து பணத்தை திருடும் ‘ஈவென்ட் பாட்’ : நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

 

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் இருந்து பணத்தை திருடும் ‘ஈவென்ட் பாட்’ : நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் இருந்து பணத்தை திருடும் ஈவென்ட் பாட் மொபைல் ஆப்-இல் இருந்து தடுப்பது எப்படி என்பது குறித்து இந்தக் கட்டுரையில் காணலாம்!

உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் இருந்து பணத்தை திருடும் ஈவென்ட் பாட் மொபைல் ஆப்-இல் இருந்து தடுப்பது எப்படி என்பது குறித்து இந்தக் கட்டுரையில் காணலாம்!

இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (சி.இ.ஆர்.டி) ‘ஈவென்ட் பாட்’ என்ற ட்ரோஜன் வைரஸ் கொண்ட ஆண்ட்ராய்டு ஆப் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களின் தனிப்பட்ட நிதி தகவல்களையும், அவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தையும் திருட வாய்ப்புள்ளது.

ஈவென்ட் பாட் என்ற “மொபைல்-வங்கி ட்ரோஜன்” பயனர்களின் எஸ்எம்எஸ் செய்திகளை படிக்கவும், எஸ்எம்எஸ் செய்திகளை இடைமறிக்கவும், ஆண்ட்ராய்டின் உள்ளமைக்கப்பட்ட அணுகல் அம்சங்களை துஷ்பிரயோகம் செய்கிறது. அத்துடன் டூ ஸ்டெப் அதன்டிகேஷன் (Two step Authentication) எனும் கடும் கட்டுப்பாட்டையும் மீறி கடந்து செல்ல இந்த ட்ரோஜன் அனுமதிக்கிறது.

ttn

இந்த வகையிலான ட்ரோஜன் வைரஸ் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு பெரும் தலைவலியாக அமைகின்றன. இதனால் பலர் தங்கள் பணத்தை பறிகொடுக்கின்றனர். அதை தவிர்ப்பதற்கு நம்பகத்தன்மை இல்லாத மூலங்களில் இருந்து வரும் எஸ்.எம்.எஸ் அல்லது இ-மெயில் லிங்க்குகளை க்ளிக் செய்யக் கூடாது. கூகுள் ப்ளே ஸ்டோரில் ஒரு ஆப்-ஐ டவுன்லோடு செய்வதற்கு முன் அந்த ஆப் குறித்த விவரங்கள், விமர்சனங்கள், ரேட்டிங்குகளை அலசி ஆராய வேண்டும்.

லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு அப்டேட்டுகளை இன்ஸ்டால் செய்வதுடன் நல்ல ஆன்டி-வைரஸ் மென்பொருளை ஸ்மார்ட்போனில் பயன்படுத்தலாம். அதேபோல முன்பின் தெரியாத வைஃபை அல்லது ப்ளூடூத் நெட்வொர்க்குகளுடன் ஸ்மார்ட்போனை இணைக்க கூடாது.