ஆண்ட்ராய்டு கோ எடிஷன் கொண்ட லாவா Z40 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

 

ஆண்ட்ராய்டு கோ எடிஷன் கொண்ட லாவா Z40 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

ஆண்ட்ராய்டு கோ எடிஷன் கொண்ட லாவா Z40 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி: ஆண்ட்ராய்டு கோ எடிஷன் கொண்ட லாவா Z40 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு கோ எடிஷன் கொண்ட லாவா Z40 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஸ்மார்ட்போன் அனுபவத்தை பெறாதவர்களுக்காக மிகக் குறைந்த விலையில் இந்த லாவா Z40 ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. சுமார் 10 இந்திய மொழிகளில் இயங்கும் இதில் கே7 ஸ்பீக்கர் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி பவர் சுமார் ஒன்றரை நாள் வரை தாக்குப் பிடிக்கும் என்று தெரிகிறது. மேலும் இதில் கார்னிங் கொரில்லா கிளாஸ் அம்சம் இடம்பிடித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விலை ரூ.3,499 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கறுப்பு மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது.

லாவா Z40 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்களை பொறுத்தவரை 4 இன்ச் டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 8.1 (கோ எடிஷன்) இயங்குதளம், 1 ஜிபி ரேம், 8 ஜிபி மெமரி, 2 எம்.பி ரியர் மற்றும் செல்பி கேமராக்கள், எல்.இ.டி ஃபிளாஷ், போக்கே மோடு, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத், மைக்ரோ யு.எஸ்.பி, லொகேஷன் மோடு, 3.5 எம்.எம் ஹெட்போன் ஜாக், 2250 எம்.ஏ.ஹெச் பேட்டரி ஆகியவை இடம்பெற்றுள்ளது.