ஆண்டாள் வைரமுத்துவின் முகத்திரையை கிழித்துள்ளார்: தமிழிசை சாடல்!

 

ஆண்டாள் வைரமுத்துவின் முகத்திரையை கிழித்துள்ளார்: தமிழிசை சாடல்!

ஆண்டாளைப் பழித்த கவிஞருக்கு,  மற்றொரு பெண் வடிவத்தின் மூலம் ஆண்டாள் பாடம் புகட்டுகிறார் என்று  தமிழிசை சௌந்தரராஜன்  கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை: ஆண்டாளைப் பழித்த கவிஞருக்கு,  மற்றொரு பெண் வடிவத்தின் மூலம் ஆண்டாள் பாடம் புகட்டுகிறார் என்று  தமிழிசை சௌந்தரராஜன்  கருத்து தெரிவித்துள்ளார்.

பெண்கள் சபரிமலை ஐயப்பன் சன்னதிக்கு அனுமதிக்கப்படுவது குறித்த நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து சத்ய பிரமாணம் ஏற்கும் கூட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. இதில் திரளான ஆண், பெண் ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர். அதே போல் இதில் பாஜகவின் மாநிலத்தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

chinmayi

அப்போது கூட்டத்தில் பேசிய தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், ‘ 100 ஆண்டுகளாகப் பழகி வரும் பழக்கம் மதிக்கப்படவேண்டும். அரசியலமைப்பு சட்டம் பிரிவு 25 படி மத நம்பிக்கைகள் மதிக்கப்படவேண்டும் அது இந்து மதத்திற்கும் பொருந்தும். வாக்கு வங்கிக்காகச் சிறுபான்மையினர் தாஜா செய்யப்படுவதும் பெரும்பான்மையினர் உதாசீனப்படுத்துவதும் நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சியினர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கூட தெரிவிப்பது இல்லை. அவ்வளவு தீண்டத்தகாத மதமாகிவிட்டதா இந்து மதம்’ என்று கேள்வி எழுப்பினார்.

‘மத உணர்வும் பண்பாடும் எதிர்க்கப்பட்டால் பொங்கி எழுவோம் என்பதை இந்தக் கூட்டம் நிரூபித்துள்ளது என்று கூறிய அவர்,  ஆண்டாளை விமர்சித்த கவிஞருக்கு மற்றொரு பெண் வடிவத்தில் ஆண்டாள்  முகத்திரையைக் கிழித்துக்கொண்டிருக்கிறாள்  என்றும் வைரமுத்துவைச் சாடியுள்ளார்.