ஆண்களின் பயனற்ற மார்பக காம்புகள்!!!

 

ஆண்களின் பயனற்ற மார்பக காம்புகள்!!!

இனப் பெருக்கத்தின் மையமான படைப்பின் ரகசியத்தை பெண்ணின் கருப்பையிலும், அவள் உருவாக்கி உலகிற்குத் தரும் புதிய சந்ததிக்கான உணவை அவள் மார்பகத்திலும் இயற்கை கொடையாக அளித்திருக்கிறது

-பிரபு

இயற்கையின் படைப்பில் பெண்கள் அதிசயமானவர்கள் மட்டுமல்ல, அபூர்வமானவர்களும் கூட!!! அதனால் தான் என்னவோ, இனப் பெருக்கத்தின் மையமான படைப்பின் ரகசியத்தை பெண்ணின் கருப்பையிலும், அவள் உருவாக்கி உலகிற்குத் தரும் புதிய சந்ததிக்கான உணவை அவள் மார்பகத்திலும் இயற்கை கொடையாக அளித்திருக்கிறது.

பெண்ணின் இந்த இரண்டு உறுப்புகளும் மனித இன சுழற்சிக்கு அச்சாணி போன்றவை. கருப்பை உடலுக்கு உள்ளே இருப்பதால் அதன் தோற்றமோ, இயக்கமோ யாருடைய கவனத்தையும் ஈர்ப்பதில்லை. ஆனால் மார்பகங்கள் அப்படியல்ல, வெளி உறுப்பாகி விட்டதால் அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறது. முக்கியத்துவம் நிறைந்த மார்பகங்கள் குறித்து நாம் அனைவரும் விழிப்படைய வேண்டியது மிக அவசியம்.

பெண்ணின் மார்பகங்கள் தாய்மையின் சின்னமாக பார்க்கப்படுவதுடன் மட்டும் அல்லாமல் குழந்தை வளர்ப்பிலும் முக்கிய பங்காற்றுகிறது. ஆனால், ஆணின் மார்பகங்களும், காம்புகளும் பயனற்றவை என்பதை உலகிற்கு விளக்கும் விதமாக பெண் ஒருவர் “பயனற்ற மார்பக காம்புகள்” என்ற தலைப்பில் வரைந்த கார்ட்டூன் வரைபடம் வைரலாகி உள்ளது.

குழந்தை வளர்ப்பின் போது, இரவு முழுவதும் நிம்மதியாக தூங்கி காலையில் எழும் கணவன், ‘கமான் டார்லிங்’ என அரவணைக்க மனைவியை கூப்பிடும் போது, அவள் சற்று ஏற இறங்க பார்த்து, மறுப்பு தெரிவித்தால், ‘என்ன நைட் சரியா தூங்கலையா…காலைலேயே இப்படி இருக்க’ என முகம் சுளித்து கேள்வி எழுப்பும் கணவன்களுக்கு, “மாட்டேயா கோஃப்” எனும் அந்த பெண் வரைந்த கார்டூன் படம் முகத்தில் அறைந்தது போன்று இருக்கும்.

இதேபோன்று காலையில் எழுந்து காபி குடிக்கும் போது கேள்வி எழுப்பிய தனது கணவருக்கு, அப்பெண் வரைந்து காட்டிய படத்தில், குழந்தை வளர்ப்பின் போது, பெண்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள், இரவு நேரத்தில் தூக்கமின்மையால் அவர்கள் படும் அவஸ்தைகள், குழந்தை பேணுதலில் பெண்கள் ஆற்றும் பங்குகள் என அனைத்தையும் அழகாக சுட்டிக் காட்டியுள்ளார்.

அந்த கார்டூன் படத்தில், “இரவு தூங்கிய சிறிது நேரத்தில் குழந்தை அழத் தொடங்குகிறது. அப்போது, தாய் மட்டும் விழிக்கிறாள். கணவன் நிம்மதியாக தூங்குகிறான். அதன்பின் பசியால் அழும் தனது குழந்தைக்கு தாய் பாலூட்டுகிறாள். அப்போதும், நிம்மதியாக கணவன் தூங்குகிறான் உபயோகமற்ற மார்பக காம்புகளுடன். குழந்தைக்கு பாலூட்டும் போது அது தனது பிஞ்சிக் கைகளால் தாயை அடிக்கிறது, கால்களால் உதைக்கிறது.

அத்துடன் சுறா மீனின் பற்களை போன்று கூர்மையாக இருக்கும் பிஞ்சிக் குழந்தையின் நகங்கள் தாயின் உடலை பதம் பார்க்கிறது. அந்த சமயத்தில் தாய் நினைக்கிறாள் மறுநாள் எழுந்தவுடன் குழந்தையின் நகங்களை வெட்ட வேண்டும் என்று. ஆனால், கணவனோ நிம்மதியாக தூங்குகிறான் உபயோகமற்ற மார்பக காம்புகளுடன். பின்னர், சிறிது நேரத்தில் குழந்தை வாந்தி எடுத்து விடுகிறது. அப்போது, தாய் நினைத்துக் கொண்டே படுத்திருக்கிறாள் காலையில் படுக்கையை சுத்தம் செய்ய வேண்டும் என்று”  இப்படியாக மறுநாள் காலையில் செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்தும் சிந்திதுக் கொண்டே தூக்கமின்மையுடன் விடியலை சந்திக்கும் தாய்மார்கள் குறித்து அப்படம் விளக்குகிறது.

இரவு தூக்கம் மட்டுமல்ல. விடிந்ததும் குழந்தைக்கு நகம் வெட்டுவது, அது வாந்தி எடுத்த படுக்கையை சுத்தம் செய்வது என குழந்தை வளர்ப்பில் 24 மணி நேரமும் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறாள் தாய்.

தவிர, குழந்தை வளரும் போது, அதன் பற்களும் வளரும்…அது தனது மார்பக காம்புகளை சுறா மீனின் கூர்மையான பற்கள் போன்று தாக்க தயாராகிக் கொண்டிருக்கின்றன என்பதையும் மகிழ்ச்சியுடன் எதிர்நோக்குகிறாள் தாய்…!!!