ஆண்களின் ‘அந்த’ பழக்கத்தால் தாம்பத்தியத்துக்கு நல்லதா? கெட்டதா?

 

ஆண்களின் ‘அந்த’ பழக்கத்தால் தாம்பத்தியத்துக்கு நல்லதா? கெட்டதா?

சுய இன்பத்தை தனிமையில் மட்டுமே அனுபவிக்க வேண்டும் எனச் சொல்லித் தரவேண்டியது பெற்றோரின் இன்றியமையாத கடமையாகும்

சுயஇன்பத்துக்காக தமது அந்தரங்க உறுப்பை தீண்டுவது முற்றிலும் இயற்கையானதே என மருத்துவர்கள் கூறுகின்றனர். இன்னும் சொல்லப்போனால் சுயஇன்பப் பழக்கத்தால் உடலுக்கு  பல்வேறு நன்மைகள் விளைவதாகவும் கூறியுள்ளனர்.

எந்த வயதிலும் ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் சுயஇன்பப் பழக்கத்தில் ஈடுபடுகின்றனர். பருவம் எட்டுவதற்கு முன்பே சிறுவர் அல்லது சிறுமியரும் தமது அந்தரங்க உறுப்பை தேய்பதை சில நேரங்களில் நாம் கவனிக்கலாம். பருவ வயதை எட்டும்போது குழந்தைகளுக்கு சுயஇன்பம் என்பது முற்றிலும் இயற்கையான விஷயம் என்றும் அதை தனிமையில் மட்டுமே அனுபவிக்க வேண்டும் எனச் சொல்லித் தரவேண்டியது பெற்றோரின் இன்றியமையாத கடமையாகும்.

பெரும்பாலானோர் இந்தப் பழக்கத்தில் தினமும் ஈடுபடுகின்றனர். இது பற்றி வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள முன்வராவிட்டாலும் வயது வித்தியாசமின்றி ஆணும் பெண்ணும் சுயஇன்பத்தில் ஈடுபடத்தான் செய்கின்றனர்.

சுயஇன்பப்பழக்கம் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. சிலர் தங்களை ரிலாக்ஸ் செய்து கொள்ள செய்கின்றனர். வேறு சிலர் தங்களது உடலைப் புரிந்து கொள்ள செய்கின்றனர். சிலர் தங்களது செக்ஸ் வேட்கையைத் தணித்துக் கொள்ள ஈடுபடுகின்றனர். துணை இல்லாத சமயத்தில் சுயஇன்பம் செய்பவர்களும் உண்டு. ஆனால் உண்மையில் பெரும்பாலோனோர் சுயஇன்பத்தில் ஈடுபடுவதற்குக் காரணம் அதில் அவர்களுக்கு முழு சுகம் கிடைப்பதுதான். திருமணம் செய்யாமல் தனித்து வாழ்பவர்கள்தான் சுயஇன்பத்தில் ஈடுபடுகின்றனர் எனச் சிலர் நினைப்பதுண்டு. மாறாக, திருமணம் ஆன தம்பதிகளும், தனிமையில் வாழ்பவர்களும் இதில் ஈடுபடுகின்றனர்.

சிலர் அடிக்கடி செய்வர். ஒருசிலர் அவ்வப்போது செய்வர். சிலர் இதைச் செய்வதே இல்லை. மனதளவிலும் உடலளவிலும் சுயஇன்பப் பழக்கத்தால் நன்மைதான் ஏற்படுகிறது. இது மிகவும் பாதுகாப்பான பாலுறவு ஆகும். தவறான பாதையில் சென்றுவிட்டாலோ பால்வினை நோய்களுக்கு ஆளாகுதலோ அல்லது கருவுரும் வாய்ப்போ நிகழலாம்.

சுயஇன்பப் பழக்கத்தில் உச்சக்கட்டத்தை எட்டும்போது உடலில் இருந்து எண்டோர்பின்ஸ் எனும் ஹார்மோன் சுரக்கிறது. இதனால் உடல் வலி குறைந்து சுகமாக உணர முடியும். உச்சக்கட்டத்தை இதில் அடைவதால் பார்ட்னருடனோ அல்லது தனியாகவோ பாலுறவில் ஈடுபடுவதால் உடல் வலி நீங்கும்.

பிற நன்மைகள்:

**பாலுறவு வேட்கை குறையும்.

**மனஅழுத்தத்தைக் குறைக்கும்.

**நல்ல தூக்கத்துக்கு வழி வகுக்கும்.

**தன்னம்பிக்கை கூடும். உடல் பொலிவுறும்.

**பாலுறவுப் பிரச்னைகளைக்குறைக்க வழி வகுக்கும்.

**மாதவிலக்கு சமயங்களில் ஏற்படும் தசைப்பிடிப்பு, தசைவலி குறையும்.

**அடிவயிறு மற்றும் இடுப்புப்பகுதி தசைகள் வலுவடையும்.

பாலுறவில் சுயஇன்பம் மிக முக்கியமானதாகும். இதன்மூலம் பாலுறவின்போது உங்கள் உடல் எப்படி இயங்கவேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம். எந்த இடத்தில் தொடவேண்டும். எவ்வளவு அழுத்தம் தந்தால் சுகமாக இருக்கும், வேகமாக இயங்குவதா, மென்மையாக இயங்குவதா, தனக்குத்தானே உச்சக்கட்டத்தை எட்டுவதற்கும், துணையுடன் உச்சக்கட்டத்தை எட்டுவதற்கு உரிய வழிமுறையை அறியலாம்.

சிலர் தினசரி, ஒரு நாளில் பலமுறை, வாரம் ஒரு முறையோ சில முறையோ அல்லது மாதம் ஒருமுறை, சில வாரங்களுக்கு ஒருமுறை, எப்போவாவது ஒரு முறை என பல்வேறாக சுயஇன்பத்தை அனுபவிக்கின்றனர். சிலர் இதை செய்யவே மாட்டார்கள்.எதுவும் தப்பில்லை. எல்லாமே இயற்கையானதாகும்.

பார்க்கும் வேலையை, பொறுப்பை, சமுக வாழ்வை புறந்தள்ளிவிட்டு சுயஇன்பத்தில் ஈடுபட்டால் அது அளவுக்கு மீறிய பழக்கம் எனலாம். இது போன்ற பிரச்னை இருப்பவர்கள் மனநல ஆலோசகர் அல்லது மருத்துவ நிபுணர் ஆலோசனை பெற வேண்டியது அவசியமாகிறது.