‘ஆண்களாக மாறிய பெண்கள்’: சேரனை பங்கமாக கலாய்த்த மது! 

 

‘ஆண்களாக மாறிய பெண்கள்’: சேரனை பங்கமாக கலாய்த்த மது! 

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 45வது நாளாய் எட்டியுள்ளது. போடியார்களுக்கு இடையே பொறாமை, அழுகை, சோகம், சந்தோஷம் என்று அனைத்தையும் பார்த்து விட்டோம். ஆனால் அவர்கள் போட்டியில் எப்படி விளையாடுகிறார்கள் என்பது தான் நமக்கு இன்னும் தெரியவேயில்லை. ஏனென்றால் கடந்த இரண்டு முறையை விட இந்த முறை டாஸ்க் சற்று குறைவாகக் கொடுத்துள்ளது தான். 

இந்த நிலையில் இன்றைக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. அதில் பெண் போட்டியாளர்கள் அனைவரும், ஆண் போட்டியாளராக மாறி நடிக்கின்றனர். அந்த வகையில் சாக்ஷி- சாண்டியாக மாற, அபிராமி- முகன் போல் மாறினார். 

அவர்களை தொடர்ந்து மதுமிதா- சேரன் போல் மாறி, அபிராமியிடம், ‘நீ பண்றது எல்லாம் நல்ல இருக்கு, ஆனா எதுக்கு பன்றோம் யோசி’ என்று அறிவுரை கூறுவது போல் புரோமோவில் காட்டப்பட்டுள்ளது.