ஆணின் சடலத்துக்கு பதில் பெண்ணின் சடலம்; சவப்பெட்டியை திறந்து பார்த்த பெற்றோர் அதிர்ச்சி!

 

ஆணின் சடலத்துக்கு பதில் பெண்ணின் சடலம்; சவப்பெட்டியை திறந்து பார்த்த பெற்றோர் அதிர்ச்சி!

வெளிநாட்டில் உயிரிழந்த தங்களது மகனின் சடலத்துக்கு பதிலாக வேறு ஒரு பெண்ணின் சடலம் அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் கேரள பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

திருவனந்தபுரம்: வெளிநாட்டில் உயிரிழந்த தங்களது மகனின் சடலத்துக்கு பதிலாக வேறு ஒரு பெண்ணின் சடலம் அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் கேரள பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த கேரளா மாநிலத்தை சேர்ந்த ரஃபீக் (29), என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது சடலத்தை அந்நாட்டு அதிகாரிகள் இந்தியாவுக்கு அனுப்பி வைத்தனர்.

தங்களது மகனின் சடலத்தை அடக்கம் செய்ய நினைத்த பெற்றோர் அவரது முகத்தை கடைசியாக் பார்த்க்து விட எண்ணி சவப்பெட்டியை திறந்து பார்த்துள்ளனர். ஆனால், அதில் பெண் ஒருவரின் சடலம் இருப்பதை கண்டு அதிர்சியடைந்த அவர்கள் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சவுதி அரேபிய விமான நிலையத்தின் சரக்கு பிரிவில் இந்த மாற்ற நிகழ்ந்துள்ளதாகவும், ரஃபீக்கின் சடலம் மாறுதலாக இலங்கை சென்று விட்டதாகவும், இலங்கை செல்ல வேண்டிய பெண்ணின் சடலம் கொச்சி விமான நிலையத்துக்கு கடந்த 20-ம் தேதி வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

தற்போது கோட்டயம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கும் இலங்கை பெண்ணின் சடலத்தை அந்நாட்டுக்கு கொண்டு செல்லவும், இலங்கையில் உள்ள ரஃபீக்கின் சடலத்தை இந்தியா கொண்டு வரும் முயற்சிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.