ஆணாக மாறிய பெண்ணுக்கு மற்றொரு பெண்ணுடன் திருமணம் முடிந்தது

 

ஆணாக மாறிய பெண்ணுக்கு மற்றொரு பெண்ணுடன் திருமணம் முடிந்தது

லலிதாவிலிருந்து லலித் ஆக மாற ஏகப்பட்ட போராட்டங்களைச் சந்தித்திருக்கிறார் சால்வே. 2018 மே மாதம் செயின்ட் ஜார்ஜ் அரசு மருத்துவமனையில் முதல் நிலை பாலியல் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை (SRS) செய்து கொண்டார். அடுத்த மாதங்களில் இரண்டாவது மற்றும் மூன்றாம் கட்ட சர்ஜரிக்கு பிறகு, சால்வே இறுதியாக ஒரு புதிய அடையாளத்தையும் பெயரையும் பெற்றார்.

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பாலின மாற்ற அறுவை சிகிச்சைக்கு செய்துகொண்டு ஆணாக மாறிய பெண் காவலர் லலித் சால்வே, ஞாயிற்றுக்கிழமை ஒரு பெண்ணை திருமணம் செய்தார்.

lalit-salve-78

லலிதாவிலிருந்து லலித் ஆக மாற ஏகப்பட்ட போராட்டங்களைச் சந்தித்திருக்கிறார் சால்வே. 2018 மே மாதம் செயின்ட் ஜார்ஜ் அரசு மருத்துவமனையில் முதல் நிலை பாலியல் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை (SRS) செய்து கொண்டார். அடுத்த மாதங்களில் இரண்டாவது மற்றும் மூன்றாம் கட்ட சர்ஜரிக்கு பிறகு, சால்வே இறுதியாக ஒரு புதிய அடையாளத்தையும் பெயரையும் பெற்றார். அந்த பெயர் தான் லலித். இவர் பீட் மாவட்டத்தின் மஜல்கான் தெஹ்ஸிலின் ராஜேகான் கிராமத்தைச் சேர்ந்தவர். 1988 ஜூன் மாதம் லலிதா குமாரி சால்வே என்ற பெயரில் பிறந்த அவர், சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தனது உடலில் ஏற்பட்ட மாற்றங்களைக் கவனித்து, மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார். அந்த பரிசோதனை அவரது உடலில் Y குரோமோசோம் இருப்பதை உறுதிப்படுத்தியது என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கு X மற்றும் Y செக்ஸ் குரோமோசோம்கள் இருக்கும்போது, ​​பெண்களுக்கு இரண்டுமே X குரோமோசோம்களாக இருக்கும்.

lalit-salve-08

சால்வே, காவலர் படையில் சேர்ந்த பிறகு, பாலியல் மாற்ற அறுவை சிகிச்சைக்கு ஒரு மாதம் விடுப்பு தரக்கோரி மாநில காவல் துறையை அணுகியிருந்தார். ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கான தகுதி அளவீடுகள் உயரம் மற்றும் எடை உட்பட அனைத்துமே வேறுபட்டவை என்பதால் அதிகாரிகள் சால்வேயின் வேண்டுகோளை நிராகரித்தனர்.

அதைத் தொடர்ந்து விடுப்பு வழங்குமாறு டி.ஜி.பிக்கு அறிவுறுத்தக் கோரி உயர்நீதிமன்றத்தை அணுகினார்.. இருப்பினும், இது அவரின் சேவை குறித்த விஷயமாக இருப்பதால் சால்வே மகாராஷ்டிரா நிர்வாக தீர்ப்பாயத்தை அணுகுமாறு ஐகோர்ட் உத்தரவிட்டது. பின்னர் சால்வேயின் பாலின மாற்ற அறுவை சிகிச்சைக்கு உள்துறை மூலம் விடுப்பு வழங்கப்பட்டது. ஆணாக மாறிய பின்பு, சால்வே மகாராஷ்டிரா காவலர் படையில் ஒரு ஆண் கான்ஸ்டபிளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளைப் பெறத் தொடங்கினார்.

lalit-salve-68

சால்வேவுக்கு, ஞாயிற்றுக்கிழமை அவுரங்காபாத் நகரில் ஒரு பெண்ணுடன் திருமணம் முடிந்தது. “மூன்று கட்ட பாலியல் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு எனக்கு மறுபிறப்பு கிடைத்தது. இப்போது திருமணத்திற்குப் பிறகு நான் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கியுள்ளேன், இனி மகிழ்ச்சியுடன் வாழ்வேன். நான் திருமணம் செய்து கொண்டதில் எனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர்” என்று சால்வே கூறினார். தற்போது சால்வே மஜல்கான் நகர காவல் நிலையத்தில் பணிபுரிகிறார்.