ஆணவத்தின் அரசியல் செயல்படாது..மக்கள் பாஜக-வை நிராகரித்துள்ளனர் : மம்தா பேனர்ஜி

 

ஆணவத்தின் அரசியல் செயல்படாது..மக்கள் பாஜக-வை நிராகரித்துள்ளனர் : மம்தா பேனர்ஜி

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள வடக்கு தினாஜ்புர் மாவட்டத்தில் உள்ள காலியாகஞ்ச் தொகுதிக்கும் 
நாடியா மாவட்டத்தில் உள்ள கரிம்புர் தொகுதிக்கும் கரக்பூர் சதர் தொகுதிக்கும் கடந்த 24 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள வடக்கு தினாஜ்புர் மாவட்டத்தில் உள்ள காலியாகஞ்ச் தொகுதிக்கும் 
நாடியா மாவட்டத்தில் உள்ள கரிம்புர் தொகுதிக்கும் கரக்பூர் சதர் தொகுதிக்கும் கடந்த 24 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், இடைத் தேர்தல் நடந்த 3 சட்டமன்ற தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

mamtha

இந்த வெற்றி குறித்து பேசிய மம்தா பேனர்ஜி, மேற்கு வங்கத்தில் மூன்று மாநிலங்களுக்கான இடைத்தேர்தல்களில் திரிணாமுல் காங்கிரஸ் திட்டமிட்ட படி வெற்றி பெற்றுள்ளது. இது மக்களின் வெற்றி. இது வளர்ச்சியின் வெற்றி. ஆணவத்தின் அரசியல் செயல்படாது. மக்கள் பாஜகவை நிராகரித்திருக்கிறார்கள். மக்கள் பாஜகவுக்கு எதிராக வாக்களித்து அவர்கள் இந்திய குடிமக்கள் என்பதை நிரூபித்திருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். 

 

இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் அதன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “வடக்கு வங்கத்தில் காளியாகுஞ்ச் சட்டமன்ற இடத்தையும், மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் கரக்பூர் சதர் இடத்தையும் வென்றுள்ளது. ஆளும் கட்சி அந்த இரண்டு இடங்களையும் வென்றுள்ளது இதுவே முதல் முறையாகும். சிறுபான்மையினர், ஆதிவாசிகள், ராஜ்பன்ஷி – அனைவரும் எங்களுக்கு வாக்களித்துள்ளனர். மரியாதை என்பது வங்காளத்தின் கலாச்சாரம்”  என்று குறிப்பிட்டுள்ளது.