ஆட்டோ விலையே ரூ.25000 தாங்க… அபராதம் ரூ.45000! என்ன விட்டுங்க… கதறும் ஆட்டோ ஓட்டுநர்

ஆட்டோ விலையே ரூ.25000 தாங்க… அபராதம் ரூ.45000! என்ன விட்டுங்க… கதறும் ஆட்டோ ஓட்டுநர்

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் சில நூறு ரூபாய் அபராதம் விதித்து எச்சரிப்பதில் நியாயம் இருக்கு. ஆனா ஒடிஷாவில்  47 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என காவல்துறையினர் கூறியது ஆட்டோ டிரைவர் ஒருவரை கலங்கவைக்கிறது. 

போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கு ஏற்கனவே இருந்த அபராதம், மற்றும் தண்டனையை விட பல மடங்கு அதிகமாக, அபராதம் மற்றும் தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளதே இந்த புதிய வாகன சட்டத்திருத்தம். இந்த புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்ததிலிருந்து வடமாநிலங்களில் உள்ள வாகன ஓட்டிகள் மிரண்டு போய் உள்ளனர். 

auto driver

இந்நிலையில் ஒடிசாவின் புவனேஸ்வரைச் சேர்ந்த ஹரிபந்து என்பவர் 25 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு பழைய ஆட்டோவை வாங்கி ஓட்டிவந்தார். குடிபோதையில் ஆட்டோ ஓட்டியபோது போக்குவரத்து காவலர்களால் பிடிக்கப்பட்டார். அப்போது அவருக்கு காத்திருந்தது அதிர்ச்சி. காரணம் குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக புதிய வாகன சட்டப்படி ஹரிபந்துக்கு ரூ 47 ஆயிரத்து 500 ரூபாய் விதிக்கப்பட்டது. இதைகண்டு அதிர்ச்சியடைந்த ஹரிபந்து, ஆட்டோவோ 25 ஆயிரம் ரூபாய்தான் அபராதம் 47, 500 ரூபாயா என புலம்பிக் கொண்டு அபராதத்தை செலுத்திவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.