ஆட்டோ மொபைல் நிறுவனங்களின் வீழ்ச்சிக்கு ஓலா, ஊபர் பயன்படுத்துவதே காரணம் – நிர்மலா சீதாராமன்

ஆட்டோ மொபைல் நிறுவனங்களின் வீழ்ச்சிக்கு ஓலா, ஊபர் பயன்படுத்துவதே காரணம் – நிர்மலா சீதாராமன்

பிஎஸ்  6 தொழில்நுட்பத்தாலும் மக்கள் வாகனங்கள் வாங்குவதை விட ஓலா அல்லது ஊபர் வைத்திருக்க விரும்புவதாலும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் தெரிவித்துள்ளார். 

நாட்டில் பொருளாதார மந்த நிலை நிலவி வருவதாக கூறப்படுகிறது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது ஆட்டோ மொபைல் நிறுவனங்களே. ஜி.எஸ்.டி போன்ற வரி விதிப்புகளால் தொழில் நிறுவனங்கள் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. குறிப்பாக மாருதி, அசோக் லேலாண்ட் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தியுள்ளன. இதனால் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலையிழந்துள்ளனர். 

Nirmala

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன், “ பிஎஸ்6 வகை எஞ்சின்களை நடைமுறைக்கு கொண்டு வர இருப்பதாலும்,  வாகனங்கள் வாங்குவதை விட ஊபர் மற்றும் ஓலா போன்றவற்றில் வாகனங்களை புக்கிங் செய்து செல்வதாலுமே ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சந்தித்து வரும் வீழ்ச்சிக்கு காரணம்” என்று தெரிவித்துள்ளார்.