ஆட்டோ டிரைவர்களுக்கு விஜய் கொடுத்த அசத்தலான ட்ரீட்! வைரலாகும் புகைப்படம் 

 

ஆட்டோ டிரைவர்களுக்கு விஜய் கொடுத்த அசத்தலான ட்ரீட்! வைரலாகும் புகைப்படம் 

மே தினத்தனத்தை முன்னிட்டு ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மதிய உணவு மற்றும் பரிசுப் பொருட்களை நடிகர் விஜய் வழங்கியுள்ளார்.

சென்னை: மே தினத்தனத்தை முன்னிட்டு ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மதிய உணவு மற்றும் பரிசுப் பொருட்களை நடிகர் விஜய் வழங்கியுள்ளார். 

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோ என்பதையும் தாண்டி ரசிகர்களை மதிக்க தெரிந்த நடிகர் என்றால் அது தளபதி விஜய் மட்டுமே. இவர் படங்களில் நடிப்பதை தாண்டி சமூக அக்கரையோடு, கஷ்டப்படும் பலருக்கும் தனது விஜய் மக்கள் மன்றத்தின் மூலம் பல உதவிகளை செய்து வருகிறார்.

அந்த வகையில் இவர் ஒவ்வொரு வருடமும் மே 1 உழைப்பாளர் தினத்தன்று ஆட்டோ ஓட்டுனர்களுக்கு விருந்தும், பரிசு பொருட்கள் தருவதை வழக்கமாக செய்து வருகிறார். இவ்வாண்டு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டமையால், இந்த ஆண்டுக்கான விழா நேற்று நடைபெற்றது. விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தற்போது விஜய் தற்போது தளபதி 63 படத்தில் நடித்து வரும் காரணத்தால், அவரது உத்தரவின் பேரில் விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் இந்நிகழ்வை நடத்தினார். நிகழ்வில் கலந்துகொண்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மதிய உணவுடன் பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டன.