ஆட்டோ டிரைவரை மிரட்டி லஞ்சம்… எஸ்.ஐ, ஏட்டு சஸ்பெண்ட்

 

ஆட்டோ டிரைவரை மிரட்டி லஞ்சம்… எஸ்.ஐ, ஏட்டு சஸ்பெண்ட்

பிரகாஷ் என்பவர் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். ஆட்டோவை நிறுத்திய சுப்பிரமணியம் மற்றும் கணேஷ், பிரகாஷிடம் லைசன்ஸ், ஆர்.சி புக் உள்ளிட்ட ஆவணங்களைக் கேட்டுள்ளார். அதற்கு பிரகாஷ் தன்னிடம் தற்போது ஆர்.சி புக் இல்லை என்று கூறியுள்ளார். உடனே ஏட்டு கணேஷ், உன் மீது மூன்று வழக்குப் போடப் போகிறேன்

சேலத்தில் ஆட்டோ டிரைவரை மிரட்டி லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ, ஏட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் சுப்பிரமணியம் என்பவர் சப்-இன்ஸ்பெக்டராகவும், கணேஷ் என்பவர் தலைமைக் காவலராகவும் பணியாற்றி வருகின்றனர். கடந்த மாதம் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, ஏற்காடு அடிவாரப் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். ஆட்டோவை நிறுத்திய சுப்பிரமணியம் மற்றும் கணேஷ், பிரகாஷிடம் லைசன்ஸ், ஆர்.சி புக் உள்ளிட்ட ஆவணங்களைக் கேட்டுள்ளார். அதற்கு பிரகாஷ் தன்னிடம் தற்போது ஆர்.சி புக் இல்லை என்று கூறியுள்ளார். உடனே ஏட்டு கணேஷ், உன் மீது மூன்று வழக்குப் போடப் போகிறேன், இதற்கு அபராதம் கட்டு என்று கூறியுள்ளார். அதற்கு ஆட்டோ ஓட்டுநர் நான் நீதிமன்றத்தில் அபராதம் கட்டிவிடுகிறேன் என்று கூறியுள்ளார். ஆனாலும் வண்டியை போலீசார் விடவில்லை. ரூ.900 தந்தால் வண்டியை விடுவிப்பதாக கூறியுள்ளனர்.
கடைசியில் ரூ.600 கொடுப்பதாக பிரகாஷ் கூறி, அந்த பணத்தை சப் இன்ஸ்பெக்டரிடம் அளித்துள்ளார். இதை அருகிலிருந்தவர்கள் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். இந்த தகவல் அறிந்த சேலம் போலீஸ் கமிஷனர் செந்தில் குமார், எஸ்.ஐ, ஏட்டு ஆகியோரிடம் விசாரணை நடத்த உத்தரவிட்டார். இந்த விசாரணையில் அவர்கள் இருவரும் லஞ்சம் வாங்கியது உறுதியானது. இதன் அடிப்படையில் அவர்கள் இருவரையும் பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.