ஆட்டோமேட்டிக் முறையில் புலியின் கழுத்தில் இருந்த கண்காணிப்பு சாதனம் அகற்றல் – வீடியோ உள்ளே

 

ஆட்டோமேட்டிக் முறையில் புலியின் கழுத்தில் இருந்த கண்காணிப்பு சாதனம் அகற்றல் – வீடியோ உள்ளே

புலியின் கழுத்தில் இருந்த கண்காணிப்பு சாதனத்தை ஆட்டோமேட்டிக் முறையில் அகற்றப்பட்டது.

மும்பை: புலியின் கழுத்தில் இருந்த கண்காணிப்பு சாதனத்தை ஆட்டோமேட்டிக் முறையில் அகற்றப்பட்டது.

2016-ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் உள்ள திபேஷ்வர் வனவிலங்கு சரணாலயத்தில் பிறந்த மூன்று குட்டிகளில் வாக்கர் என்று பெயரிடப்பட்ட புலியும் ஒன்றாகும். பின்னர் இது 1,300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அதே மாநிலத்தை சேர்ந்த ஞானங்கங்க சரணாலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த புலி குட்டியாக இருக்கும்போதே அதன் நடமாட்டத்தை கண்காணிக்க அதன் கழுத்தில் கண்காணிப்பு சாதனம் கட்டப்பட்டது.

ஆனால் தற்போது அந்த கண்காணிப்பு சாதனம் புலியின் கழுதை இறுகப் பிடித்து கொண்டிருந்தது. அதனால் புலிக்கு மூச்சுத்திணறல் அபாயம் ஏற்பட இருந்தது. இந்நிலையில், அந்த கண்காணிப்பு சாதனம் ஆட்டோமேட்டிக் முறையில் தானாக கழன்று விழும் வகையில் செயல்படுத்த அதிகாரிகள் முயற்சி செய்தனர். அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. கண்காணிப்பு சாதனம் திடீரென கழன்று விழுந்ததும் அதைக் கண்டு துள்ளிக் குதித்த வாக்கர் அதை ஆச்சரியத்துடன் பார்த்து விட்டு அந்த இடத்தை விட்டு அகன்றது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பலரால் வைரலாக பகிரப்படுகிறது.