ஆட்சி மாறுமா? மூன்றாவது அணி சேருமா? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு!!

 

ஆட்சி மாறுமா? மூன்றாவது அணி சேருமா? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு!!

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய சூழ்நிலைகள் என்னவாக இருக்க வாய்ப்பிருக்கிறது எனப் பார்க்கலாம். 

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய சூழ்நிலைகள் என்னவாக இருக்க வாய்ப்பிருக்கிறது எனப் பார்க்கலாம். 

பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சி அமைக்கத் தேவையான 272 என்ற மேஜிக் நம்பரை எட்டினால் மீண்டும் நம்ம மோடி சர்கார்தான். பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 250 இடங்களைப் பெற்று, பெரும்பான்மைக்கு 22 இடங்கள் தேவை. சிறிய கட்சிகள், சுயேட்சைகள் மற்றும் குறைந்த இடங்களைப் பெற்றுள்ள கட்சிகளிலிருந்து பிரிந்து வரும் எம்.பி.க்கள் ஆதரவுடன் மீண்டும் மோடி தலைமையிலான ஆட்சி சிறப்பாக அரங்கேறும். 

bjp

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 220 முதல் 230 இடங்களே கிடைக்கின்றன. ஆட்சி அமைக்க 40 முதல் 50 இடங்கள் தேவை. அணிசேரா அணி அல்லது மூன்றாம் அணியைச் சேர்ந்த கட்சிகளிடம் ஆதரவு கேட்பது. அணி சேரா கட்சிகளான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, பிஜு ஜனதா தளம் ஆகியவற்றின் ஆதரவைப் பெற்று பாரதிய ஜனதா தலைமையிலான ஆட்சி அமைய வாய்ப்பு. மூன்றாவது அணி என்றால், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் வடகிழக்கு மாநிலக் கட்சிகள் ஆகியவற்றில் ஆதரவளிக்க முன்வரும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்களித்து ஆதரவைப் பெறலாம். ஆனால், மூன்றாவது அணி மற்றும் அணி சேரா அணியின் ஆதரவைப் பெற பிரதமர் வேட்பாளரை, அதாவது மோடியை கைவிடும் நிலை பாரதிய ஜனதா கட்சிக்கு நேரிடலாம். 

rahul

காங்கிரசுக்கு 150 இடங்கள் கிடைத்து, மூன்றாம் அணி, அணி சேரா அணி கட்சிகளுக்கு மொத்தம் 160 இடங்கள் கிடைக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 210 இடங்களுக்குக் கீழ் கிடைக்கிறது. பாரதிய ஜனதா தலைமையிலான ஆட்சி அமைய வாய்ப்பு இல்லாத சூழலில், மூன்றாவது அணி, அணி சேராத அணி கட்சிகளின் ஆதரவுடன் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பு தோன்றலாம். 

mamata

காங்கிரஸ் 110 முதல் 130 இடங்கள் வரை வெற்றி பெற்று, மூன்றாவது அணி, அணி சேராத அணிக் கட்சிகளுக்கு 170 இடங்கள் கிடைக்கும் நிலையில், காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அரசு ஏற்பட வாய்ப்புள்ளது

காங்கிரசுக்கு 75 முதல் 100 இடங்கள் கிடைத்து, மூன்றாவது அணி, அணி சேரா அணி கட்சிகளுக்கு மொத்தம் 180 இடங்கள் கிடைக்கும் சூழல். திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளம், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, திமுக,  இடது சாரிகள், தேசியவாத காங்கிரஸ் ஆகியவற்றில் ஒன்றிலிருந்து ஒருமித்த கருத்து அடிப்படையில் பிரதமர் வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார். அவரது தலைமையிலான மூன்றாவது அணி அரசைக் காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரிக்கும். இந்த சூழ்நிலையில், பிரதமர் பதவிப் போட்டியில் மாயாவதி, மம்தா பானர்ஜி, சந்திரசேகர ராவ் ஆகியோர் இருப்பார்கள். அவர்களில் காங்கிரசின் ஆதரவு யாருக்கோ அவரது தலைமையில்தான் சிறுபான்மை அரசு அமைய வாய்ப்புள்ளது.