“ஆட்சி நமக்குத்தாண்ணே, ஆனா நீங்க முதல்வர் இல்லண்ணே” – கர்நாடக களேபரம்!

 

“ஆட்சி நமக்குத்தாண்ணே, ஆனா நீங்க முதல்வர் இல்லண்ணே” – கர்நாடக களேபரம்!

சபாநாயகரின் முடிவை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கலாம் என 76 வயது எடியூரப்பாவை இந்தப்பக்கம் சாந்தப்படுத்திக்கொண்டே, அந்தப்பக்கம் கர்நாடக லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த 63 வயதான ஜெகதீஷ் ஷெட்டரை டெல்லிக்கு ஆலோசனைக்கு வரச் சொல்லிவிட்டார்.

சென்ற வருடம் நடந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பாஜக வெற்றி பெற்றிருந்தாலும், காங்கிரஸ்-ஜனதா தள திடீர் கூட்டணியால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை. நாடாளுமன்ற தேர்தல்வரை காத்திருக்க முடிவுசெய்து, அதன்பின் ஆட்டத்தை ஆரம்பித்தார் எடியூரப்பா. திட்டமும் நன்றாக கைகொடுக்க, ‘இப்போதைக்கி’ கர்நாடக சட்டமன்றத்தில் பாஜகதான் பெரும்பான்மை கட்சி. “வியாழக்கிழமை நாள் நல்லாயிருக்கு, இன்னைக்கே பதவி ஏத்துக்கட்டுமா அமித் ஜி?” என தன் உளகிடக்கையை மறைமுகமாக வெளிப்படுத்தி கடிதம் எழுதினார் எடியூரப்பா. அமித் யாரு? “எல்லாத்தையும் நீங்களே முடிவு பண்ணிட்டா, அப்புறம் நாங்க எதுக்கு ஜி இருக்குறோம், கொஞ்சம் பொறுமையா இருங்க” என சற்றே விவகாரத்தை ஆசுவாசப்படுத்தி இருக்கிறார்.

Yeddyurappa

ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களின் ராஜினாமவை ஏற்பதா இல்லை தகுதிநீக்கம் செய்வதா என்ற சபாநாயகரின் முடிவை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கலாம் என 76 வயது எடியூரப்பாவை இந்தப்பக்கம் சாந்தப்படுத்திக்கொண்டே, அந்தப்பக்கம் கர்நாடக லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த 63 வயதான ஜெகதீஷ் ஷெட்டரை டெல்லிக்கு ஆலோசனைக்கு வரச் சொல்லிவிட்டார். அமித்தாவது ஆலோசனை கேட்கிறதாவது என்ற உங்களின் நியாயமான சந்தேகம் புரிகிறது. எடியூரப்பாவுக்கு 76 வயது, அதுவும், கர்நாடக பாஜகவில் தாமே எல்லாம் என்ற நினைப்பு கொண்டவர். கூட்டிக் கழிச்சுப் பாருங்க, கணக்கு சரியா வரும். அடுத்த அத்வானி?