ஆட்சி கவிழ்ந்தற்கு நானா காரணம்? தேவகவுடாவுக்கு பதிலடி கொடுத்த சித்தராமையா…

 

ஆட்சி கவிழ்ந்தற்கு நானா காரணம்? தேவகவுடாவுக்கு பதிலடி கொடுத்த சித்தராமையா…

கர்நாடகாவில் மதச்சார்ப்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி அரசு கடந்த மாதம் கவிழ்ந்தது. கூட்டணி அரசின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் ராஜினாமா செய்ததே இதற்கு முக்கிய காரணம். இதனையடுத்து எடியூரப்பா தலைமையில் பா.ஜ. ஆட்சியை பிடித்தது. 

கூட்டணி அரசு கவிழ்ந்தது தொடர்பாக காங்கிரசும், ஜனதாதளமும் எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமையன்று எச்.டி. தேவகவுடா பேட்டி ஒன்றில் மதசார்ப்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தற்கு சித்தராமையாதான் முக்கிய காரணம் என பெரிய குண்டை போட்டார்.

இதனையடுத்து தேவகவுடாவின் குற்றஞ்சாட்டுக்கு சித்தராமையா தற்போது பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நாட்டின் மிகப்பெரிய பொறுப்பில் இனவாத கட்சி இருந்தது.மத்திய அரசு எதிர்கட்சிகளை ஒடுக்க முயன்றது. அரசியலமைப்பு, ஜனநாயகம் மற்றும் மதசார்ப்பற்ற தன்மை பாதுகாக்க வேண்டிய அவசர நிலை இருந்தது. அதனால்தான் நான் குமாரசாமி முதல்வராவதை எதிர்க்கவில்லை. தற்போது கூட்டணி அரசு கவிழ்ந்தற்கும் எச்.டி. தேவகவுடா, குமாரசாமி மற்றும் ரேவண்ணா ஆகியோர் மட்டுமே காரணம் என கூறினார்.