ஆட்சியை கவிழ்த்திடாதீங்க அமைச்சர் வேலுமணி… கெஞ்சிக் கூத்தாடும் எடப்பாடி..!

 

ஆட்சியை கவிழ்த்திடாதீங்க அமைச்சர் வேலுமணி… கெஞ்சிக் கூத்தாடும் எடப்பாடி..!

உள்ளாட்சி துறை மீதான மெகா ஊழல் புகார்களை மறைத்து அவற்றின் அழுத்தத்தை, வீரியத்தை, அவை பற்றிய பேச்சினை திசைதிருப்பத்தான் இந்த சவாலை அவர் கையிலெடுத்துள்ளார்.

ஆட்சியை கவிழ்த்திடாதீங்க அமைச்சர் வேலுமணி… கெஞ்சிக் கூத்தாடும் எடப்பாடி..!

வேலூர் தொகுதியில் தோல்வி, அமைச்சர் மணிகண்டன் பதவி பறிப்பு என்ற பரபரப்புகளுக்கு இடையில் அமைச்சர் வேலுமணியின் ‘மழை நீர் சவால்’ விஷயம்தான் அ.தி.மு.க.வில் பெரும் பரபரப்பாய் ஓடிக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவின் புகைப்படங்கள் மட்டுமல்ல… எடப்பாடியாரின் போட்டோ கூட இல்லாமல் இந்த ‘சவால்’ திட்டத்தை வைத்து தனது ஒட்டுமொத்த கட்சிக்கும் ஷாக் கொடுத்திருக்கிறார் வேலுமணி. 

“2006ல் ஆட்சியைப் பிடித்த தி.மு.க. அடுத்த ஐந்து ஆண்டுகளில் மிக மோசமான தோல்வியை சந்திக்கவும், அதன் பிறகு முதல்வர் நாற்காலியை நெருங்கமுடியாமல் போனதற்கும் காரணம் தமிழகத்தைப் புரட்டி எடுத்த மிக மோசமான மின்சார பற்றாக்குறை விவகாரம்தான். இதைச் சொல்லிக்காட்டியே தேர்தலில் வெற்றி பெற்றது அ.தி.மு.க.

ஆனால், இப்போதோ அ.தி.மு.க. ஆட்சியை படுத்தி எடுக்கிறது குடிநீர் பிரச்னை. நீலகிரி, கோயமுத்தூர் என இரண்டு மூன்று மாவட்டங்களில் மட்டும் சமீபத்தில் மழை பெய்து கொண்டிருக்கிறதே தவிர மற்றபடி முக்கால்வாசிக்கும் மேற்பட்ட தமிழகம் சருகாக காய்ந்து கிடக்கிறது. அதிலும் கடந்த கோடையில் ஒட்டிமொத்த தமிழகத்தையும் வெப்பம் போட்டு வாட்டி எடுத்துவிட்டது. மழையுமில்லாமல், நிலத்தடி நீரும் வெகுவாய் குறைந்து மக்கள் வீதிகளில் குடங்களோடு அலைய துவங்கினர். வேற்று மாநிலங்களில் இருந்து ரயிலில் தண்ணீர் கொண்டுவரும் அளவுக்கு நிலைமை மோசமானது.

இவ்வளவு ஏன்? ஹாலிவுட் நடிகர் லியானர்டோ டி காபிரியோவே சென்னையின் குடிநீர் பஞ்சத்தை பற்றி தனது சமூக வலைதள பக்கத்தில் எழுதுமளவுக்கு நிலைமை மோசமானது. இதனால் சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் வேலுமணியிடம் ‘அவங்க ஆட்சி மின்சாரம் இல்லாமல் கவுந்த மாதிரி, நம்ம ஆட்சி தண்ணீரே இல்லாமல் தவிச்சு செத்துடாமல் பார்த்துக்குங்க. என்ன செய்வீங்கன்னு தெரியாது, ஆனால் நிலைமையை சீர் செய்யுங்க. சமாளிப்புகளே வேண்டாம்.’ என்று கட் அண்டு ரைட்டாக சொல்லிவிட்டார். இதில் டென்ஷனாகி ஒரு அரசியல் கன்சல்டன்ஸி கொடுத்த ஐடியாப்படி ‘மழை நீர் சவால்’ என்று பச்சை டீ ஷர்ட்டை போட்டுக் கொண்டு களமிறங்கிவிட்டார் அமைச்சர் வேலுமணி.

முதல்வர் மீது தனக்கிருக்கும் கடுப்பை வெளிப்படுத்திடத்தான் அவரது போட்டோவை கூட போடாமல் இந்த ப்ராஜெக்ட்டை துவக்கிவிட்டார். சொல்லப்போனால் முதல்வருக்கு வேலுமணி விட்டிருக்கும் அரசியல் சவாலாகத்தான் இதைப் பார்க்கணும்.

மேலும் தனது உள்ளாட்சி துறை மீதான மெகா ஊழல் புகார்களை மறைத்து அவற்றின் அழுத்தத்தை, வீரியத்தை, அவை பற்றிய பேச்சினை திசைதிருப்பத்தான் இந்த சவாலை அவர் கையிலெடுத்துள்ளார். ஆனால் அதற்கு வேறு சாயம் பூசி கொண்டு சென்றுள்ளார்” என்கிறார்கள்.